தமிழக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூல் – அமைச்சர் எச்சரிக்கை!

5
தமிழக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூல் - அமைச்சர் எச்சரிக்கை!
தமிழக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூல் - அமைச்சர் எச்சரிக்கை!
தமிழக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூல் – அமைச்சர் எச்சரிக்கை!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கல்வி கட்டணம் :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் புதிய கல்வியாண்டும் தொடங்கி விட்டது. கொரோனா பரவலும் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தொலைதூர பேருந்து சேவைகள் – ஜூன் 28 முதல் துவக்கம்?

இதற்கிடையில் கொரோனா தீவிரம் காரணமாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான குழுவையும் அரசு அமைத்தது. தற்போது அந்த குழு 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க 5 வகையான முறைகளை பரிந்துரைத்துள்ளது. அதனை தொடர்ந்தது இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முதற்கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு எடுக்கப்படும் என கூறினார். மேலும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் பள்ளிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டணம் வசூலிக்க வேண்டும் அதை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

 1. Thaniyar School teacher eppadi irunthal enna unka government and teachers mattum nalla irunga thaniyar school teacher valvatharam patri ithu varikum entha step m edukala fees collection pathi mattum pesaringa government teacher salary illa half cut panni kodukalam Entha government um sarilla

 2. Kindly can think of private school teachers.
  They are not paid salary or half salary.past 15 months teachers condition s are becoming very worst.
  Many have committed suicide also
  Please the government can look to it and take necessary actions to save private school teachers

 3. Even Private Colleges Staff’s also not getting their full salary and also not in time, how can we manage our Family? No one bothering about this, anything steps could be made from Govt. Regarding this

 4. Private school teachers and their salary is mainly responsible by the HM of that concern school. What the government school teachers will do for pvt school teachers. Go to your school and fight with the principal. While collecting fees in lakhs from students did your principal gave to govt school teachers. Speak logically. Comment as an educated person

 5. ஆன்லைன் க்ளாஸ் சொல்லி அரைமணி நேரம் மட்டுமே வகுப்பு நடக்கும். மீதமுள்ள நேரம் பொற்றோர்கள் தான் படிக்க வைக்கிறார்கள். இவர்கள் நடத்தும் பாடம் குழந்தைகளுக்கு புரிவதில்லை. அதையும் பெற்றோர்கள் தான் சொல்லி கொடுக்கிறார்கள். ஆனால் பள்ளி கட்டணம் முழுவதுமாக வசூலிக்க படுகிறது. படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு இல்லையா லாக் டவுன். அவர்கள் எங்கே போய் கட்டுவார்கள் பணத்திற்கு என்ன பண்ணுவார்கள் . மாத மாதம் தவணை முறையில் கட்ட பெற்றோர்கள் தயார் ஆனால் பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொள்ளாமல் முழுவதுமாக தான் கட்ட வேண்டும் என்று பெற்றோர்களிடம் திணிக்கிறார்கள். இதற்கு முதலமைச்சர் அய்யா அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!