தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!

1
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!

கொரோனா நோய் பரவல் குறித்த அச்சம் பெற்றோர்கள் மத்தியில் குறைந்தால் மட்டுமே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா 2 ஆம் அலை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. தினம்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்து வந்தனர். இதனால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து உள்ளது. அதே போல் நடப்பு கல்வி ஆண்டும் மாணவர்களுக்கு துவங்கி விட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து – அமைச்சர் உறுதி!

இதனை அடுத்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அண்டை மாநிலமான தெலுங்கானாவில் வரும் ஜூலை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பிற மாநில அரசுகளும் பின்பற்றும் என்று கூறப்பட்டு வந்தது. தமிழகத்திலும் அதே போல் பள்ளிகள் திறப்பது குறித்து விரைவாக முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டு துவங்கி 1 மாதம் முடிந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விடும் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, ‘பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் அச்சம் முழுமையாக நீங்கிய பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். முதலில் மேல்நிலை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டு அதன் பிறகு படிப்படியாக பிற வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!