தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகைக்கு தமிழக மக்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்கு அரசு 16,768 அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அமைச்சரின் முக்கிய அறிவிப்பு:

2022 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இப்பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதி முதல் சென்னையில் தினசரி இயங்க கூடிய 2,100 பேருந்துகளோடு சேர்த்து 4,000 சிறப்பு பேருந்துகள் இயங்க உள்ளது. 11, 12, 13 ஆகிய 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 10,300 பேருந்துகள் மற்றும் வெவ்வேறு ஊர்களில் இருந்து 6,468 சிறப்பு பேருந்துகளும் பொங்கலன்று புறப்பட உள்ளன. 16,768 பேருந்துகள் மொத்தமாக இயங்கவுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணன் அறிவித்துள்ளார்.

டிச.25க்கு முன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு முக்கிய ஆலோசனை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு சொந்த ஊரை விட்டு சென்னை வரும் பயணிகளுக்கு 16 மற்றும் 17 ஆம் தேதியில் தினசரி இயங்கும் பேருந்துகளோடு சிறப்பு பேருந்துகளும் இயங்கவுள்ளது. மேலும் அந்த 2 நாட்களில் மொத்தமாக 16,709 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று நேற்று நடைபெற்ற போக்குவரத்து துறை ஆலோசனை பொது கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகள்  www.busindia.comwww.tnstc.in, tnstc official app, www.redbus.inwww.paytm.com ஆகிய வெப்சைட்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

சம்பள கணக்கில் PF வைத்திருப்போர் கவனத்திற்கு – டிச.31ம் தேதிக்குள் ‘இது’ கட்டாயம்!

சிறப்பு பேருந்துகள் அனைத்தும் 24 மணி நேரமும் இயங்கும். மேலும் பேருந்துகள் குறித்து எதுவும் புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 என்ற தொலைபேசி எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம். இப்பேருந்து புகார் சேவைகள் 24 மணி நேரமும் இயங்கும். ஆம்னி பேருந்து கட்டணம் அதிகமாக வசூல் செய்தால் 1800 425 6151, 044 24749002 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் பேட்டியில் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here