முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு விசாரணை – மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்!
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று நடந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதான 2ம் வழக்கு விசாரணையில் அவருக்கு மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற காவல்:
வழக்கமாக தேர்தல் நடக்கும் சமயங்களில் எதிர் எதிர் கட்சியினர் ஏதாவது ஒரு வகையில் மோதலில் ஈடுபட்டு விடுவார்கள். இதனை தவிர்ப்பதற்காக தான் இது போன்ற பதற்றமான சூழ்நிலைகளில் காவல்துறையினர் கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதையும் மீறி ஒரு சில இடங்களில் இது போன்ற மோதல்கள் எழுந்து விடுகின்றது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க. பிரமுகரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இது தவிர, சென்னை ராயபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் உள்பட 110 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா முன்பு ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். தாக்குதல் வழக்கில் மார்ச் 7-ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனால் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமாரை வைத்து விசாரணை நடத்தி, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மார்ச் 11ம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
முன்னாள் அமைச்சர் என்பதை கருத்தில் கொண்டு முதல் பிரிவு அறையை ஒதுக்க கேட்டபோது சிறைத்துறையினர் தரமறுத்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த வழக்கின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அதற்கான விசாரணை நடக்க உள்ளநிலையில், சாலைமறியல் வழக்கு இன்று காலை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் மார்ச் 9ம் தேதி வரை ஜெய்குமாருக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டனர்.