தமிழக அரசுப்பணிகளில் யார் யாருக்கு முன்னுரிமை? அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளார்.
அரசுப்பணிகளில் முன்னுரிமை:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு பின்னர் துறை வாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்விற்கு எதிரான சட்டமசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவித்தார். பின்னர் காவல்துறையினருக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு – 40% ஆக அதிகரிப்பு!
பின்னர் பேசிய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தேர்வு பாடத்தாள் கட்டாயம் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அரசு போட்டித் தேர்வுகளில் ‘தமிழ் மொழி’ கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!
மேலும் பேசிய அமைச்சர் முதல் தலைமுறை பட்டதாரி, அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றோர் ஆகியோருக்கும் அரசுப்பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார். இத்தகைய அறிவிப்புகள் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது