தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் திறக்கும் தேதி – அமைச்சர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பருவத்தேர்வுகள் நடத்துவது குறித்தும், கல்லூரிகள் மீண்டும் திறப்பது குறித்தும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
கல்லூரி பருவத்தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் முதற்கட்ட கொரோனா நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை – வரைமுறைகள் வெளியீடு!
பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு பருவத் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் கல்லூரிகள் எப்போது திறக்கலாம் என்பது குறித்தும், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, இணையவழி வகுப்புகளின் நிலை, நிலுவைத் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவது, நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர்.