தமிழகத்தில் மாணவிகளுக்கு கல்விக்காக ரூ.1000? அமைச்சர் உறுதி!

0
தமிழகத்தில் மாணவிகளுக்கு கல்விக்காக ரூ.1000? அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் மாணவிகளுக்கு கல்விக்காக ரூ.1000? அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் மாணவிகளுக்கு கல்விக்காக ரூ.1000? அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். இதையடுத்து முக்கிய தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

மாணவிகளுக்கு 1000 ரூபாய்:

தமிழகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ” முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம் என்று தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் 18 வயதில் சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தைத் திருமணம் என்று கருதப்படுகிறது. குழந்தைத் திருமணத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விரைவில் நிலைமை மாறும் , குழந்தை திருமண எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்தார். 1 முதல் 5 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தொடர்ந்து பேசிய அவர், சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை. தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது. விலைப்பட்டியலைப் பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி நடத்துவது குறித்த தெளிவான விளக்கத்தை கல்வித்துறை கொடுத்துவிட்டது .சமூக நலத்துறை சார்பில் எல்.கே.ஜி யு.கே.ஜி நடத்தப்படவில்லை எனவும் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்தார். மேலும் மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here