உதவி பேராசிரியர் தேர்வு இடஒதுக்கீடு குழப்பம் – அமைச்சர் விளக்கம்!!

1
உதவி பேராசிரியர் தேர்வு இடஒதுக்கீடு குழப்பம் - அமைச்சர் விளக்கம்!!
உதவி பேராசிரியர் தேர்வு இடஒதுக்கீடு குழப்பம் - அமைச்சர் விளக்கம்!!
உதவி பேராசிரியர் தேர்வு இடஒதுக்கீடு குழப்பம் – அமைச்சர் விளக்கம்!!

தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய இடஒதுக்கீட்டில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு குழப்பம்:

அண்ணாமலை பல்கலைக்கழகம் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வை நடத்துகிறது. தமிழக அரசு பொதுவாக 69% இடஒதுக்கீடு கொள்கையின் படியே செயல்படுகிறது. ஆனால் TNSET தேர்வு விண்ணப்பத்தில் இடஒதுக்கீட்டிற்கான வகைகளில் கிரீமிலேயர் அல்லாத ஒபிசி பிரிவினருக்கு ஒரு வகை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகை ஒதுக்கீடு மத்திய அரசின் கொள்கையின் படி செயல்படுவதாகவும்.

தமிழகத்தில் கோவில்கள் திறக்க அனுமதி? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றவர்கள் இந்த தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். பின்தங்கிய பிரிவினருக்கு இதில் 5% தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (கிரீமிலேயர் அல்லாத ஓபிசி) என தேர்வர்களுக்கான வகை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அறிவிப்பின் முதல் பகுதியில் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவினருக்கு 5% தளர்வு அளிப்பதாகவும், இரண்டாவது பாதியில் அத்தகைய குறிப்புகள் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, கட்டணம் மற்றும் தேர்வு முடிவுகளைப் பற்றி குறிப்பிடும்போது அறிவிப்பில் MBC மற்றும் BC ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் எழுந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஓபிசி பணியாளர் நலச் சங்கத்தின் அகில இந்திய கூட்டமைப்பின் சார்பில் கூறுகையில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கருத்தை மாநில அரசு ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இது குறித்து விசாரிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்ணப்ப செயல்முறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவை தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கம் அளிக்க முயற்சிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. MBC (Vanniyar) =10.5% Ida Odhukeedu Edappadiyaar Mudhalamaicharaga irundha podhu 2 maadhathirku munbu Maruthuvar Ayya Petrukoduthadhu….
    Adhai Sudalai Niraivetravendum….
    Sudalai Niraivetravillai eneraal Niraivetra Vaippom….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!