தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை எப்போது? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது முக ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தற்போது இத்திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஊக்கத்தொகை:
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது முதல்வர் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலவச பேருந்து பயணம், ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை போன்ற வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி இவர் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருகிறார். ஆனால் மக்கள் குறிப்பாக குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்த ரேஷன் கடைகள் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
TN Job “FB
Group” Join Now
இது குறித்து பல்வேறு தரப்பினரும் அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு சட்ட மன்ற கூட்டத் தொடரிலும் ரூ.1000 ஊக்கத்தொகை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது திமுகவினர் தேர்தல் முடிவடைந்த பிறகு இத்திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தனர். தற்போது திமுகவினர் ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தேவையான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.