தமிழகத்தில் கோவில்கள் மீண்டும் திறக்க அனுமதி? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் கோவில்கள் மீண்டும் திறக்க அனுமதி? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கோவில்கள் மீண்டும் திறக்க அனுமதி? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கோவில்கள் மீண்டும் திறக்க அனுமதி? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் வருகிற 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கோயில்கள் திறப்பு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

கோயில்கள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காரணத்தால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை (ஜூன் 21) காலை 6 மணி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு அவசியம் – முழு விவரம்!!

இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் கோயில்கள் திறப்பு குறித்து தமிழக அரசு எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல், அதாவது சுமார் 1 மாத காலத்திற்கும் மேலாக கோயில்கள் மூடப்பட்டு உள்ளன.

ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – சம்பளம் எவ்வளவு உயரும்?

இதனால் கோயில்கள் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. தற்போது இது குறித்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள கோயில்கள் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்திருந்தாலோ, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்திருந்தாலோ அவர்கள் தாங்களாக முன் வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!