தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மின்தடை கிடையாது – அமைச்சர் அறிவிப்பு!!
ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் மற்றும் அலுவலர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதால் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படாது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
மின்தடை இல்லை:
தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக பலர் அலுவலக பணிகளை வீட்டில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடந்து வருகின்றது. பொதுவாக மின்சாரத்துறையின் பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் பராமரிப்பு பணிகளுக்கு என்று காலை 12 மணிக்குள் ஏதாவது 2 மணி நேரம் மட்டும் மின்தடை செய்யப்படும் என்று தமிழக அரசு முன்னர் அறிவித்திருந்தது. தற்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தமிழகத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை மின்தடை செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார்.
ஜூன் 7க்கு பின்னர் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – மாநில அரசு திட்டம்!!
வீட்டில் இருந்து பணி புரிபவர்களுக்காவும், மாணவர்களுக்காகவும் தடையின்றி மின்சாரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தவிர்க்க முடியாத மிகவும் அவசியமான பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.