தமிழக தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை – புதிய உத்தரவு வெளியீடு!

0
தமிழக தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - புதிய உத்தரவு வெளியீடு!
தமிழக தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - புதிய உத்தரவு வெளியீடு!
தமிழக தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை – புதிய உத்தரவு வெளியீடு!

தமிழகத்தில் இன்று அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் துவங்கிய நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என சில அறிவிப்புகளை வழங்கியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆன்லைன் மூலமாக தான் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததுமே பழையபடி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தாண்டு தான் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் நடத்தாத காரணத்தினால் மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

பின்னர், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெற்றது. அனைத்து சனிக்கிழமையும் பள்ளிக்கு வருவது மிகவும் சிரமமாக இருப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே குற்றம் சாட்டினர். இதனால், இந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

Post Office இல் தினமும் ரூ.333 முதலீடு செய்தால் 16 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

இந்நிலையில், நேற்று சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற லிங்க் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில், தனியார் பள்ளி நிறுவனங்கள் மாணவர்களிடம் உடனடியாக பள்ளி கட்டணத்தை கட்டும்படி வற்புறுத்த கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மேலும், பள்ளி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்யும் பள்ளி நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இன்னும் 20 நாட்களுக்குள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!