தமிழக பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் – மீறினால் அதிரடி நடவடிக்கை!

0
தமிழக பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் - மீறினால் அதிரடி நடவடிக்கை!
தமிழக பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் - மீறினால் அதிரடி நடவடிக்கை!
தமிழக பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் – மீறினால் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் திமுக ஆட்சிவந்த பிறகு பள்ளிக்கல்விதுறையில் ஏராளமான மாற்றங்கள் வந்துள்ளது. பள்ளிகள் சம்பந்தப்பட்டு ஏதேனும் புகார்கள் வந்தால் அமைச்சர் உடனடியாக அதற்கு தீர்வு கண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எழுந்துள்ள புகார் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.

அமைச்சரின் எச்சரிக்கை:

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஆன போதிலிருந்து அனைத்து துறைகளிலும் நிர்வாக மாற்றம், அதிகாரிகள் மாற்றம் புதிய திட்டங்கள் போன்றவைகள் நடந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக கல்வித்துறையை எடுத்து கொண்டால் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வியை அளிக்கும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை அரசுடன் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் கிராம பகுதிகளில் பயிலும் குழந்தைகள் காலை நேரத்தில் பசியின்றி கல்வி பயின்று வருகின்றனர். தற்போது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் பள்ளிகளில் சாதி பாகுபாடு காட்டுவதாக புகார்கள் வந்துள்ளது. ஒரு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களை மட்டும் தரையில் அமர்த்தி கல்வி கற்பிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

தமிழகத்தில் வேகமெடுக்கும் மர்ம காய்ச்சல் – சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு!

Exams Daily Mobile App Download

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, பேசிய அவர் இது உணர்ச்சி வசபடுகின்ற செய்தி என்பதனால் சரிவர விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைவரும் சமம் என்பதை கற்பிக்கவே பள்ளி கூடங்கள் உள்ளது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைகள் அணியும் திட்டம் காமராஜர் ஆட்சியின் போதே கொண்டு வரப்பட்டது. அண்மையில் தமிழக முதல்வர் டெல்லி சென்ற போது அம்முதல்வரிடம் காசு இருப்பவர்களுக்கு ஒரு கல்வி, காசு இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்ற சூழல் மாற வேண்டும் என்று கூறினார். மேலும் பள்ளிக்கூடங்களில் பாகுபாடுகள் நடைபெறுவது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் அதற்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here