தீவிரமடையும் அக்னிபத் திட்டம், திரும்ப பெற வாய்ப்பில்லை – ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் உறுதி!

0
தீவிரமடையும் அக்னிபத் திட்டம், திரும்ப பெற வாய்ப்பில்லை - ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் உறுதி!
தீவிரமடையும் அக்னிபத் திட்டம், திரும்ப பெற வாய்ப்பில்லை - ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் உறுதி!
தீவிரமடையும் அக்னிபத் திட்டம், திரும்ப பெற வாய்ப்பில்லை – ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் உறுதி!

ராணுவத்தில் நாட்டின் இளைஞர்கள் பங்கு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்னிபத் திட்டம் ராணுவ அதிகாரிகளின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்டது. ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டம்:

17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் நாட்டின் ராணுவத்தில் அதிகம் சேருவதை ஊக்குவிக்கும் வகையில் 4 ஆண்டு கால சேவையாக அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் 4 கால சேவைக்கு பின்னர் இளைஞர்களின் வாழ்கை கேள்விக்குறியாகி விடும் என்றும், அவர்கள் அதன் பிறகு வேறு எந்த பணிக்கு செல்வது என்றும் குழப்பம் ஏற்படலாம். மேலும், ராணுவ சேவைக்கு பின்னர் தீவிர வாத கும்பல்கள் அவர்களை அணுகவும், இதனால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கருத்துக்கள் எழுந்து உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை – பொருளாதார நெருக்கடியால் முடிவு!

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்கள் எரிப்பு மற்றும் கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீட்டில் இன்று முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடந்தது. இதன்பின்னர், ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அக்னிபத் திட்டம் ராணுவத்தில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே தொடங்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

ராணுவத்தை இளமை சக்தியுடன் சீரமைக்க வலியுறுத்திய பரிந்துரைகளின் படி அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிவீரர்கள் உயிர் தியாகம் செய்தால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். வரும் 4 முதல் 5 ஆண்டுகளுக்கு 50,000 முதல் 60,000 வரை வீரர்களை தேர்ந்தெடுக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள் தீவைப்பு, வன்முறை, போராட்டம் ஆகியவற்றில் பங்கெடுத்தது இல்லை என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும் மேலும், காவல்துறை சோதனைக்கு பின்னரே திட்டத்தில் சேர முடியும். முப்படை தளபதிகளின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்ட அக்னிபத் திட்டம் ஒருபோதும் திரும்பப் பெற மாட்டாது என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here