மிலாடி நபி கொண்டாடும் நாள் – தமிழக தலைமை காஜி அறிவிப்பு!

0
மிலாடி நபி கொண்டாடும் நாள் - தமிழக தலைமை காஜி அறிவிப்பு!
மிலாடி நபி கொண்டாடும் நாள் - தமிழக தலைமை காஜி அறிவிப்பு!
மிலாடி நபி கொண்டாடும் நாள் – தமிழக தலைமை காஜி அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று (08.10.2021) ரபிஉல் அவவல் மாத முதல் பிறை தொடங்கியுள்ளது. அதன்படி 18.10.2021 அன்று மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

மிலாடி நபி:

இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடி நபி திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவவல் மாதத்தின் 12 ஆம் நாள் நபிகள் நாயகம் மெக்காவில் பிறந்தார். நபிகள் நாயகம் இளமைப் பருவத்திலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் விளங்கியதால் அவர் அனைவராலும் நம்பிக்கையாளர் என்று அழைக்கப்பட்டார். 40ம் வயதில், இவரை அல்லாஹ் இறை துாதராக அறிவித்தார். அன்றைய நாள் முதல் அவர் உலக மக்களின் நல்வாழ்வுக்கு வழி காட்டினார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செய்திக்குறிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!

மேலும் பணிவுடையவராக திகழ்ந்த நாயகம், பிறரது துன்பத்தை நீக்குவதில் முழு அக்கறை கொண்டவர். வாழ்வில் ஒழுக்கம் மற்றும் உண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தை கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர். நபிகள் நாயகம், கிபி 632 ரபியுல் அவ்வல் மாதம் 12 ல் இவ்வுலகை துறந்தார். இவர் இறந்தநாளும் பிறந்த நாளும் ஒன்றே அந்த நாள் மிலாடி நபி திருநாளாக ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண் குழந்தைகளுக்கான ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ – பெற்றோர்கள் கவனத்திற்கு! முழு விவரம் இதோ!

அதே போல் இந்த வருடம் ஹிஜ்ரி 1443 ச.ஃபர்‌ மாதம்‌ 29ம்‌ தேதி வியாழக்கிழமை ஆங்கில மாதம்‌ 07.10. 2021 தேதி அன்று மாலை ரபிஉல்‌ அவ்வல்‌ மாத பிறை தமிழ்நாட்டில்‌ பல்வேறு இடங்களில்‌ காணப்பட்டது. அதனால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம்‌ 08.10.2024 தேதி அன்று ரபிஉல்‌ அவ்வல்‌ மாத முதல்‌ பிறை என்று
ஷரியத்‌ முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால்‌ மீலாதுன்‌ நபி செவ்வாய்க்கிழமை 19.10.2021 தேதி கொண்டாடப்படும்‌ என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!