Microsoft windows 11 இன்று வெளியீடு – சிறப்பு அம்சங்கள் விளக்கம்!

0
Microsoft windows 11 இன்று வெளியீடு - சிறப்பு அம்சங்கள் விளக்கம்!
Microsoft windows 11 இன்று வெளியீடு - சிறப்பு அம்சங்கள் விளக்கம்!
Microsoft windows 11 இன்று வெளியீடு – சிறப்பு அம்சங்கள் விளக்கம்!

உலகின் மிக சிறந்த மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட 11 வது பதிப்பை அதாவது, விண்டோஸ் 11 இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது.

விண்டோஸ் 11

உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக திகழும் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் (Microsoft Corporation) கணிப்பொறிக்கு தேவையான பல வகையான மென் பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் windows இயங்குதளம் தான் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இயங்குதளத்தை அந்நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.

சென்னையில் தடுப்பூசி முன்பதிவிற்கு சிறப்பு இணையதளம் – இன்று முதல் தொடக்கம்!

அதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டுமாக Windows 10 இயங்குதளம் சில கூடுதல் மேம்பாட்டுடன் windows 11 ஆக இன்று (ஜூன் 24) வெளியாகியுள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்டின் அடுத்த தலைமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள Windows 11 இயங்குதளம், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த Windows 11 ல் உள்ள அனைத்து ஐகான்களும் திரைக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது. இவை ஒருங்கிணைந்த தோற்றத்தை வழங்குவதோடு ஒவ்வொரு ஐகான்களும் ஒரே போல புதுப்பிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் தற்போதுள்ள Windows 11ன் தொடக்க ஒலி சற்று வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவிர touch screen மற்றும் touch அல்லாத அனைத்து சாதனங்களும் முற்றிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விண்டோஸ் 11 மக்களிடையே வரவேற்பை பெறும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மைக்ரோசாப்ட் Windows 10 ஆபரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு வின்டோஸ் 11 இலவசமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்டோஸ் 10 போல இதுவும் கணினி பயன்பாட்டாளர்களை கவரும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!