Microsoft நிறுவனத்தில் B.Tech & M.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
Microsoft நிறுவனத்தில் B.Tech & M.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
Microsoft நிறுவனத்தில் B.Tech & M.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
Microsoft நிறுவனத்தில் B.Tech & M.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

Microsoft நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது அலுவலகங்களில் பிடெக் மற்றும் எம்டெக் படித்துள்ள பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு

முன்னணி அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் ஒரு கணினி மென்பொருள் மற்றும் கணினி தொடர்புடைய சேவைகளை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் மென்பொருள் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை அளிக்க முன்வந்துள்ளது. அதாவது, கொரோனா வைரஸின் தாக்கத்தால் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராவது எப்படி? மதிப்பெண்கள், தேர்வு முறை & முழு விபரம் இதோ!

இந்த வணிக நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. அதன் படி இந்தியாவில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலகங்களில் பிடெக், எம்டெக், எம்எஸ் படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான தகுதி, இடம், விண்ணப்பமுறை உள்ளிட்ட விவரங்களை விரிவாக காணலாம்.

பதவி:

முழு நேர மென்பொருள் பொறியாளர்

தகுதிகள்:

பிடெக், எம்டெக், கணினி அறிவியலில் எம்எஸ் பட்டம்
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 7.5 அல்லது 10 GPA உடன் 2022 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் உரிய நேரத்தில் கடமைகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

பொறுப்புகள்:

திட்டமிடல், வடிவமைப்பு, செயல்படுத்தல்

பணியிடம்:

ஹைதராபாத், பெங்களூர், நொய்டா

விண்ணப்ப முறை:
  • விண்ணப்பதாரர்கள் https://careers.microsoft.com/us/en/job/1072686/Software-Engineer-Full-Time-Opportunity என்ற இணையதள பக்கத்தை திறக்கவும்.
  • இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படித்த பிறகு, இப்போது விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
  • பிறகு Microsoft, LinkedIn, Facebook, Google உள்நுழைவு விவரங்களுடன் உள்நுழைய வேண்டும்.
  • இப்போது விண்ணப்பதாரர்கள் தனது விவரங்களுடன் ஒரு சுயவிவர படிவத்தை உருவாக்க வேண்டும்.
  • தொடர்ந்து தகுதிகளின் விவரங்களை உள்ளிடவும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்த பிறகு அதற்குரிய தகவல்களை வழங்கும். அதைத் தொடர்ந்து தேர்வு அல்லது நேர்காணல் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஹைதராபாத், பெங்களூர் மற்றும் நொய்டாவில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!