IPL 2022 – MI vs CSK ஆட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் – வெற்றி யாருக்கு? எகிறும் எதிர்பார்ப்பு!

0
IPL 2022 - MI vs CSK ஆட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் - வெற்றி யாருக்கு? எகிறும் எதிர்பார்ப்பு!
IPL 2022 - MI vs CSK ஆட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் - வெற்றி யாருக்கு? எகிறும் எதிர்பார்ப்பு!
IPL 2022 – MI vs CSK ஆட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் – வெற்றி யாருக்கு? எகிறும் எதிர்பார்ப்பு!

இப்போது வரை நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் தோல்வியை தழுவி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

MI Vs CSK

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் அதிக முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மிகவும் பலம் வாய்ந்த அணிகளாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, இதுவரை நடைபெற்ற 14 சீசன்களில் இந்த 2 அணிகளும் சேர்த்து மொத்தம் 9 கோப்பைகளை வென்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் கோப்பையை வென்றுள்ளது. இது தவிர 11 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப்களுக்கு தகுதியாகி இருக்கிறது. இப்படிப்பட்ட வரலாறு படைத்த இவ்விரு அணிகளும் IPL 2022 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது.

TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 – கொள்கை முடிவு எடுக்க கோரிக்கை முன்வைப்பு!

இது தவிர வழக்கமாக புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்க சண்டையிடும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இந்த முறை கடைசி 2 இடங்களை பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன் ரேட்டிங் அடிப்படையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் இந்த நிலைமை ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவையாக மாறி இருக்கிறது.

வழக்கமாக ஒவ்வொரு சீசன் துவங்கும் போதும் இவ்விரு அணிகளும் தங்களது வெற்றி கணக்கை அதிகரிக்க வேண்டும் என்பதில் சண்டையிட்டு வந்த ரசிகர்கள் இப்போது தோல்வியை சேர்ந்து உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில், வழக்கமாக இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் போட்டி மீது பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்படுவது போல, இந்த முறை இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஏனென்றால் இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் ஏதாவதொரு அணி வெற்றி பெற வேண்டும் என்பதால் அது எந்த அணியாக இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் சில நகைச்சுவையான மீம்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில், ‘இப்போது MI அல்லது CSK அணிக்கு 2 புள்ளிகளைப் பெறுவதற்கான ஒரே வாய்ப்பு கிடைப்பது ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது மட்டுமே என்றும் CSK மற்றும் MI இரண்டும் ஒரு போட்டியில் வெற்றி பெற ஒரே வழி 21ம் தேதி நடைபெறும் போட்டியில் தான்’ என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!