மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘மெட்டி ஒலி’ நடிகை பம்பாய் ஞானம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'மெட்டி ஒலி' நடிகை பம்பாய் ஞானம் - ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'மெட்டி ஒலி' நடிகை பம்பாய் ஞானம் - ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘மெட்டி ஒலி’ நடிகை பம்பாய் ஞானம் – ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவியில் இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் புத்தம் புதிய சீரியலான ‘எதிர்நீச்சல்’ மூலம் மெட்டி ஒலி புகழ் பம்பாய் ஞானம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை பம்பாய் ஞானம்

தமிழ் சின்னத்திரை உலகில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரபல நடிகை பம்பாய் ஞானம். அதாவது. மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு மூலம் ஒரு மேடை நாடகக் கலைஞராக தனது நடிப்பு பணியை துவங்கிய நடிகை பம்பாய் ஞானம், காலப்போக்கில் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களான கோலங்கள், மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்பட ரிலீஸ் தேதி – அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

இது தவிர சினிமா உலகிலும் சொல்லக்கூடிய அளவுக்கு தனது பங்களிப்பை கொடுத்திருக்கும் நடிகை பம்பாய் ஞானம் ஆகா, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, நள தமயந்தி, ஒரு நாள் ஒரு கனவு, வெயில், அழகிய தமிழ்மகன், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர சினிமா துறையில் இவர் அளித்த அளப்பரிய சேவைக்காக கடந்த 2005ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் சினிமாவில் நீண்ட காலமாக பயணித்து வந்த இவர் கடந்த 10 வருடங்களாக எந்தவொரு சீரியல் அல்லது திரைப்படங்களிலும் தோன்றவில்லை.

Bigg Boss Ultimate Promo – வனிதா & சுரேஷ் சர்க்கரவர்த்திக்கு இடையில் முற்றிய வாக்குவாதம்! சினேகன் வெளிநடப்பு!

இப்படி இருக்க, சுமார் 10 வருடங்கள் கழித்து இவர் சன் டிவியின் புத்தம் புதிய சீரியல் ஒன்றின் மூலம் நடிகையாக ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, கோலங்கள் சீரியல் இயக்குனர் திருசெல்வன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வரும் ‘எதிர்நீச்சல்’ என்ற புதிய சீரியல் மூலம் நடிகை பம்பாய் ஞானம் சீரியலில் களமிறங்க இருக்கிறார். இத்தொடர் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சீரியல் மூலம் மக்களை மகிழ்விக்க வரும் பம்பாய் ஞானத்திற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here