மீண்டும் இணைந்த சன் டிவி ‘மெட்டி ஒலி’ குடும்பம் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
மீண்டும் இணைந்த சன் டிவி 'மெட்டி ஒலி' குடும்பம் - வெளியான புகைப்படம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மீண்டும் இணைந்த சன் டிவி 'மெட்டி ஒலி' குடும்பம் - வெளியான புகைப்படம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மீண்டும் இணைந்த சன் டிவி ‘மெட்டி ஒலி’ குடும்பம் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

90’ஸ் கிட்ஸ் முன்னணி சீரியல்களில் ஒன்றாக சன் டிவி மெட்டி ஒலி சீரியல் இருந்தது. அந்த சீரியல் முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும் அந்த சீரியலில் நடித்த நடிகைகள் ஒற்றுமையாக இன்னும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெட்டி ஒலி சீரியல்:

முன்னதாக சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் பிரபலம், குறிப்பாக சித்தி, மெட்டிஒலி என 90’ஸ் கிட்ஸ் காலத்தில் பல பிரபலமான சீரியல்கள் இருந்தன. அதில் மெட்டிஒலி சீரியலுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த சீரியலில் அனைவருக்கும் நினைவில் வருவது, சரோஜா என்ற சரோ கதாபாத்திரம் தான். சேத்தனுக்கு மனைவியாக நடித்த சரோவின் நிஜப்பெயர் காயத்ரி சாஸ்த்திரி. நடிகை காயத்ரியின் பூர்விகம் கர்நாடகம். ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் இவரது அண்ணன் தான் நடிகர் சஞ்சய்.

வயிற்றில் குழந்தையுடன் விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ நடிகை ஆல்யா மானஸா- வைரலாகும் புகைப்படம்!

காயத்ரி சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்’ படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்திலும் நடித்தார். ஆனால் அவருக்கு மெட்டிஒலி சீரியல் தான் நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது சன் டிவியில் ரோஜா என்ற முன்னணி சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் காயத்ரி நடித்து வருகிறார். சமீபத்தில் மெட்டி ஒலியில் நடித்த விஜி மரணம் அடைந்தார். அதில் மெட்டிஒலி நடிகைகள் ஒன்று சேர்ந்தார்கள்.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா வெளியிட்ட குழந்தையின் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

பின் மெட்டி ஒலி சீரியலில் தன்னுடைய கடைசி தங்கையாக பவானி கேரக்டரில் நடித்த நடிகை ரேவதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். மெட்டி ஒலி சீரியல் முடிவடைந்து பல வருடங்கள் ஆன பின்பும் அதில் அக்கா தங்கையாக நடித்த நடிகைகள் அனைவரும் இன்றும் அதே பாசத்துடன் பழகி வருவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!