ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

0
ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

அரசின் நலத்திட்டங்களுக்கு முக்கிய தேவையாக இருந்து வரும் ஆதார் கார்டை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்வது அவசியமாகும். தற்போது மொபைல் ஆப் மூலமாகவே அப்டேட் செய்து கொள்ளும் படியான வசதி வழங்கப்பட்டுள்ளது. எப்படி இந்த ஆப் மூலமாக அப்டேட் செய்வது என்பதற்கான தகவல் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு:

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கியமான ஆதாரமாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி இவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும். இந்த திருத்தங்களை செய்து கொள்ள ஆதார் மையத்திற்கு செல்லத் தேவையில்லை. மொபைல் போனிலேயே mAadhaar App என்கிற செயலியை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விரைவில் செய்து கொள்ள முடியும்.

PF பயனாளிகளுக்கான அகவிலைப்படி 13% உயர்வு – வெளியான சூப்பர் அறிவிப்பு!

தற்போது எப்படியும் mAadhaar App ஆப் மூலமாக வீட்டில் இருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி தொடர்பான குறைகளை சரிசெய்து கொள்வது என்பதை பார்ப்போம். முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்கள் https://tinyurl.com/yx32kkeq என்கிற லிங்க் மூலமாகவும், iOS பயனாளர்கள் https://tinyurl.com/taj87tg என்கிற லிங்க் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

பதிவிறக்கம் செய்த பிறகு Register My Aadhaar என்பதை கிளிக் செய்து ஆதார் எண், மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். OTP எண்ணை பதிவு செய்தவுடன் mAadhaarApp என்பதற்குள் நுழையலாம். இங்கு பெயர் மற்றும் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்க எண்ணை காணலாம். இதில் உள்ள ஆதாரை கிளிக் செய்வதன் மூலமாக ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். பின்பு, Captcha-ஐ சரியாக உள்ளிட்டு Request OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். OTP வந்ததும் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளலாம். இந்த அப்டேட்டிற்கு ரூ.50 செலுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!