PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

EPFO அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள் தங்களது சேமிப்பில் இருக்கும் பேலன்ஸ் தொகையை சரிபார்க்க சில ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

பேலன்ஸ் சரிபார்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு தனது பயனர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் PF மற்றும் EPF சேவைகள் ஊழியர்களின் சிறந்த சேமிப்பு விருப்பமாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாத ஊதியம் பெறும் ஊழியர்களும் அடிப்படை சம்பளத்தில் 12% தங்களது PF கணக்கில் செலுத்த வேண்டும். அதே போல நிறுவன நிர்வாகிகளும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12%த்தை PFல் பங்களிப்பு செய்வார்கள். இந்த மொத்த பணமும் ஊழியர்களின் எதிர்காலத்தை நிலையானதாக மாற்றுகிறது.

தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

இப்போது, ஒவ்வொரு ஆண்டும் அரசு PF கணக்கிற்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ள சில ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகளை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.

SMS வழியாக பேலன்ஸை சரிபார்க்க:

முதலில் PF பேலன்சை சரிபார்க்க 7738299899 என்ற எண்ணிற்கு “EPFOHO UAN ENG” என SMS அனுப்ப வேண்டும்.
அப்படி அனுப்பினால் உங்களது கடைசி PF பங்களிப்பு மற்றும் பேலன்ஸ் போன்ற விவரங்கள் SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.
இந்த செயல்முறையை UANஐ வழங்காமல் மேற்கொள்ள முடியும்.
இருப்பினும், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மட்டுமே SMS அனுப்பப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

EPFO இணையதளம் வழியாக பேலன்ஸ் சரிபார்க்க:

முதலில் EPFO இணையதளத்தில், எம்ப்ளாயி பிரிவுக்கு சென்று மெம்பர் பாஸ்புக் என்பதை கிளிக் செய்யவும்.
இதில், லாகின் செய்ய உங்கள் UAN மற்றும் கடவுச்சொல் தேவைப்படும்.


இப்போது PF பாஸ்புக் மற்றும் வட்டி விவரங்கள் தோன்றும்.
மேலும், உங்கள் UAN எண் ஒன்றுக்கு மேற்பட்ட PF கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு அக்கவுண்ட்டின் விவரங்களையும் அணுக முடியும்.
இந்த பேலன்ஸை சரிபார்க்க பொருத்தமான மெம்பர் ஐடியை கிளிக் செய்ய வேண்டும்.

UMANG செயலி மூலம் பேலன்ஸ் சரிபார்க்க:

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து உமாங் (UMANG) செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
இந்த ஆப் மூலம் PF பேலன்ஸ், க்ளைய்ம் ஸ்டேட்டஸ் மற்றும் KYC ஸ்டேட்டஸ் போன்ற விவரங்களையும் பெறலாம்.

மிஸ்டு கால் வழியாக பேலன்ஸ் சரிபார்க்க:

இப்போது மிஸ்டு கால் சேவை மூலம் PF பேலன்ஸை சரிபார்க்க, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும். இந்த செயல்முறை முற்றிலும் இலவசமானது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!