EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – இ ஸ்டேட்மெண்ட் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

0
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு - இ ஸ்டேட்மெண்ட் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு - இ ஸ்டேட்மெண்ட் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – இ ஸ்டேட்மெண்ட் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

EPFO அமைப்பின் பயனர்கள் தங்களது பாஸ்புக் தொடர்பான சேவைகளை பெற்றுக் கொள்ள முதலில் இணையதளத்தில் தங்களை பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO பாஸ்புக்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வரவிருக்கும் மாதத்தில் அனைத்து EPFO பயனர்களுக்கும் கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட வட்டிப் பணம் கிடைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, EPFO அமைப்பு ஜூன் 30ம் தேதிக்குள் வட்டிப் பணத்தை ஒவ்வொரு சந்தாதாரர்களின் வங்கி கணக்கிற்கு டெபாசிட் செய்யும் என்று தெரிகிறது. இப்போது, EPFO கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட வட்டி விகிதங்களை தெரிந்து கொள்வதற்கு இ-ஸ்டேட்மெண்ட் எனும் சேவை நடைமுறையில் இருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!

இந்த பாஸ்புக் மூலம், பிரிவு 80Cன் கீழ் மொத்த வருமானத்தில் இருந்து எவ்வளவு விலக்கு பெறலாம் என்பதை பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும். இது தவிர, நிறுவனத்தின் பங்களிப்பு, ஊழியர்கள் செலுத்திய தொகை, EPF கணக்கை முந்தைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றுவது போன்ற சேவைகளுக்கும் இந்த பாஸ்புக் அவசியமாகிறது. மேலும், EPF பாஸ்புக்கில், ஊழியர்களின் பிஎஃப் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய திட்ட விவரங்கள், நிறுவனத்தின் பெயர் மற்றும் ஐடி, EPFO அலுவலக விவரங்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த பாஸ்புக்கை பெற முதலில் சந்தாதாரர்கள் EPFO இணையதளத்தில் தங்களை பதிவு செய்திருக்க வேண்டும். இதற்காக,

  • முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அங்கு ‘ஆக்டிவேட் யுஏஎன்’ (யுனிவர்சல் அகவுண்ட் நம்பர்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  • திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும்.
  • அதில் UAN, ஆதார், பான் உள்ளிட்ட பிற விவரங்களை நிரப்பவும்.
  • இதில் சிவப்பு நிற நட்சத்திரத்துடன் குறிக்கப்பட்டிருப்பவை அவசியம் என்பதை நினைவில் கொள்ளவும்.
Exams Daily Mobile App Download
  • தொடர்ந்து ‘கெட் ஆத்தரைசேஷன் பின்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது ஒரு புதிய பக்கம் தோன்றும்.
  • இதில், நீங்கள் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
  • இப்போது உங்கள் மொபைலுக்கு SMS மூலம் OTP அனுப்பப்படும்.
  • அதை உள்ளிட்டு, ‘ஓடிபியைச் சரிபார்த்து யுஏஎன் ஆக்டிவேட் செய்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பிறகு, கடவுச்சொல் SMS மூலம் அனுப்பப்படும்.
  • உங்கள் கணக்கில் உள்நுழைய இந்தக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்.
  • பிறகு கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளலாம்.
  • இப்போது இணையதளத்தில் பதிவு செய்த 6 மணிநேரத்திற்கு பிறகு EPFO பாஸ்புக் கிடைக்கும்.

பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்ய:

  • முதலில், https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அங்கு UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  • இப்போது ‘லாக்-இன்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

  • பிறகு, உங்கள் பாஸ்புக்கை காண உறுப்பினர் ஐடியை தேர்ந்தெடுக்கவும்.
  • இந்த பாஸ்புக் PDF வடிவத்தில் இருக்கும்.
  • அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • இப்போது விலக்கு அளிக்கப்பட்ட PF அறக்கட்டளைகளின் பாஸ்புக்கை இதில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:

கடவுச்சொல்லை மாற்ற விரும்பினால் பயனர்கள் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையத்தை பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!