ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - புகைப்படத்தை மாற்றுவது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - புகைப்படத்தை மாற்றுவது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

இந்தியாவில் குடிமக்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றி கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படத்தினை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்த எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை உள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் இந்த ஆதார் அட்டை ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை போன்றவற்றை போல முக்கிய ஆவணமாக உள்ளது. தற்போது அனைத்து அரசு, தனியார் மற்றும் தனிநபர் சார்ந்த பிற வேலைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் தேவைப்படுவதால் நாம் அதை எல்லா நேரங்களிலும் கைகளில் வைத்திருப்பதும் அதை அப்டேட்டாக வைத்திருப்பதும் அவசியமாகும்.

Reliance Jioவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – 3 OTT தளங்களுடன் சூப்பர் அறிவிப்பு!

அதனால் UIDAI அமைப்பு ஆதாரில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. அதன் படி பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் போன்றவைகளை மாற்றி கொள்ளலாம். இதற்கு உரிய ஆவணங்கள் வேண்டியது அவசியமாகும். மேற்குறிய அனைத்து விவரங்களை ஆன்லைன் வாயிலாகவே மாற்றலாம் எங்கும் அலைய தேவையில்லை. ஆனால், கைரேகை, புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்தில் மட்டும் தான் மாற்ற முடியும். அதற்கு முதலில் ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக ஆதாரில் புகைப்படத்தை மாற்ற என்ரோல்மெண்ட் பதிவு செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

அதில் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் விவரம் ஆதார் மைய அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு நேரடியாக கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்படும். பிறகு புகைப்படம் மாற்ற கட்டணமாக ஜிஎஸ்டி யுடன் ரூ.100 செலுத்த வேண்டும். புகைப்படம் மாற்ற அதிகபட்சமாக 90 நாட்கள் வரை ஆகும். அதன் பிறகு புதிய ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்யலாம். ஆதாரில் புகைப்படம் மாற்ற எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை. உங்களின் வேறு புகைப்படம் கூட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!