HCL Tech நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

0
HCL Tech நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
HCL Tech நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
HCL Tech நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

HCL நிறுவனம் ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து உள்ளது. டெக்பீ என்ற பயிற்சி வகுப்பை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனம் வழங்குகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்கள், பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனத்திலேயே முழு நேரப் பணியாளர்களாக வேலை கிடைக்கும். அவர்களுக்கு உயர் கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூப்பரான அறிவிப்பு:

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் இனி கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது என்றும் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி முதல் முறையாக கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நோய்த் தாக்கம் குறைந்து அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்துடன் 12 மாத பயிற்சி வகுப்பை (டெக்பீ’ என்ற பெயரில் நடத்தப்படும் பயிற்சி) வழங்குவதாகவும், இந்தப் பயிற்சியை முடித்தால், IT நிறுவனங்களில் தொடக்கநிலை வேலைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த பயிற்சி முடித்த ஹெச்சிஎல் நிறுவன புராஜக்டுகளில் இன்டர்ன்ஷிப் செய்யும்போது மாதந்தோறும் ரூ.10,000 ஸ்டைபண்ட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. இந்தப் பயிற்சிக்கு கணிதம் அல்லது பிசினஸ் மேக்ஸ் ஆகிய பாடங்களை பிரதானமாகக் கொண்டு 2021ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது மறு தேர்வு எழுத இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2. இந்த பயிற்சியை நிறைவு செய்த பிறகு, மென்பொருள் பொறியாளர், உள்கட்டுமான மேலாண்மை, டிசைன் இன்ஜினியர் அல்லது டிஜிட்டல் பிராசஸ் அசோசியேட் போன்ற பணிகளில் சேரும் போது, அவர்களுக்கு நிறுவனத்தை பொறுத்து ரூ.1.70 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரையில் ஆண்டு சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

3. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் நடத்தப்படும் திறன் தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்த HCL கேட் தேர்வில் தேர்ச்சியடைபவர்களுக்கு பின்னர் INTERVIEW நடத்தப்பட்டு, அதற்குப் பிறகு OFFER LETTER வழங்கப்படும்.

4. HCL நிறுவனத்தில் பயிற்சி பெறும்போதே, பிஐடிஎஸ் பிலானி, சாஸ்த்ரா, அமிதி போன்ற தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பட்டப்படிப்பையும் படிக்கலாம். மாணவர்கள் தேர்வு செய்யும் பட்டக் கல்வியை பொறுத்து, அவர்களுக்கான கல்வி கட்டணத்தின் ஒரு பகுதியை HCL நிறுவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5.இந்த பயிற்சிக் கல்வியில் சேருவதற்கு ரூ.1,00,000 மற்றும் வரிகள் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள் https://www.hcltechbee.com/ என்ற இணையதளத்தில் பயிற்சி திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!