தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வட தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை

01.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஈரோடு, தர்மபுரி, இருப்பத்தூர்‌, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, சிவகங்கை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

02.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும்‌ சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

03.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

04.09.2022 மற்றும்‌ 05.09.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருப்பத்தூர், கரூர்‌ மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

ராதிகாவை நேருக்கு நேராக கேள்வி கேட்ட இனியா, கடுப்பான கோபி – பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

01.09.2022: குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள் மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கேரள கடலோர பகுதிகளில், லட்சத்தீவு – மாலத்தீவு பகுஇகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

02.09.2022: குமரிக்கடல்‌ பகுஇகள்‌, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள் மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுஇகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

03.09.2022: குமரிக்கடல்‌ பகுஇகள்‌, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 6௦ கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!