Meta நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட 11,000 ஊழியர்கள் – அதிர்ச்சி தகவல்!

0
Meta நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட 11,000 ஊழியர்கள் - அதிர்ச்சி தகவல்!
Meta நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட 11,000 ஊழியர்கள் - அதிர்ச்சி தகவல்!
Meta நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட 11,000 ஊழியர்கள் – அதிர்ச்சி தகவல்!

Meta நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது மேலும் சில ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட எந்தவொரு சலுகையை வழங்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பணி நீக்கம்:

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை தலைவிரித்தாடி வருவதால் முன்னணி நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கத்திற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முறையில் இறங்கியுள்ளனர். இதில் குறிப்பாக மெட்டா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் இவர்களுக்கு சில சலுகைகளையும் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி இவர்களுக்கு ஊழியர்கள் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கேற்ப 2 வார ஊதியம் மற்றும் 16 வார அடிப்படை ஊதியம் வழங்குவதாக தெரிவித்தது. அத்துடன் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 6 மாதத்திற்கு சுகாதார உதவியும் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் தற்போது மொத்தமாக சுமார் 11,000 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து, அறிவிக்கப்பட்ட சலுகைகளை வழங்காததால் ஊழியர்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – அரசு அதிகாரிகள் திட்டம்!

Exams Daily Mobile App Download

மேலும் இது தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது, தங்களுக்கு 8 வார சம்பளமும் மற்றும் COBRA insurance மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பாக தலைமை அதிகாரிக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனால் இந்நிறுவனம் ஊழியர்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்ட சலுகைகளை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!