ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ‘மேரா ரேஷன்’ செயலி அறிமுகம்! முழு விபரம் இதோ!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 'மேரா ரேஷன்' செயலி அறிமுகம்! முழு விபரம் இதோ!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 'மேரா ரேஷன்' செயலி அறிமுகம்! முழு விபரம் இதோ!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ‘மேரா ரேஷன்’ செயலி அறிமுகம்! முழு விபரம் இதோ!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டின் கீழ் உருவாக்கப்பட்ட மேரா ரேஷன் செயலி மக்கள் அதிக உதவியை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றி முழுமையாக இந்த பதிவில் காணலாம்.

‘மேரா ரேஷன்’ செயலி:

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களையும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இணைத்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் நாட்டில் எந்த மாநிலத்திலும் தனக்குரிய ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட குடிமகன் மட்டுமே பயோமெட்ரிக் செயல்முறைக்கு செல்ல வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டின் கீழ் உருவாக்கப்பட்ட மேரா ரேஷன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் பயனடையும் வாய்ப்புகள் உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு CBIக்கு மாற்றம் – உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு!

தங்கள் வேலையின் காரணமாக அடிக்கடி நகரம் அல்லது மாநிலத்தை மாற்றுபவர்கள், மேலும் ஒரே நகரத்தில் அடிக்கடி வீடு மாறும் மக்கள் மேரா ரேஷன் ஆப் மூலம் தங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடைகளை கண்டறிந்து அங்கு தங்களுடைய ஒதுக்கீட்டுக்கான ரேஷன் பொருட்களை பெறலாம்.

செயலியின் அம்சங்கள்:
  • மேரா ரேஷன் மொபைல் ஆப் இந்தி மற்றும் ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் உள்ளது. அதன் பயன்பாடு மிகவும் எளிதானது.
  • இந்த செயலியின் மூலம் உங்களுக்கு கோதுமை மற்றும் அரிசி எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதன் விலை என்ன, எவ்வளவு பெறப்பட்டது, இன்னும் எவ்வளவு பெற வேண்டும் போன்ற தகவல்களை அறியலாம்.
  • ரேஷன் கார்டில் எவ்வளவு வினியோகம் செய்யப்பட்டுள்ளது, வீட்டைச் சுற்றி எத்தனை ரேஷன் டீலர்கள் உள்ளனர், இவை அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

Post Office சேமிப்பு கணக்கினை ஆன்லைனில் ஓபன் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

  • ரேஷன் கார்டு டீலரையும் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். உங்கள் வீட்டிலிருந்து எந்த டீலர் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்ற தகவலையும் இது வழங்குகிறது.
  • டீலரின் உரிம எண் மற்றும் பெயர், முகவரி அனைத்தையும் காணலாம்.
  • ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
  • நாடு முழுவதும் நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கு அருகிலுள்ள டீலர்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும். இந்த முழு அமைப்பும் Google Maps உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேரா ரேஷன் மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் மேரா ரேஷன் என்று பதிவிட்டு தேட வேண்டும்.
  • செயலியை கண்டுபிடித்த பிறகு மொபைல் செயலியில் பதிவு செய்ய விருப்பம் உள்ளது. இதற்கு உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும்.
  • நீங்கள் எண்ணை உள்ளீடு செய்தவுடன், உங்கள் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கே காட்டப்படும்.

தமிழகத்தில் டிச.15 முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழு விபரம் இதோ!

  • ரேஷன் கார்டுடன் தொடர்புடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இங்கே காணலாம், அத்துடன் ஆதார் எண்ணும் தெரிவிக்கப்படும்.
  • மொபைல் செயலியில் உள்ள தகுதி விருப்பத்தைத் தேர்வு செய்யும் போது, ரேஷன் கார்டு எண் குறித்து கேட்கப்படும். எண்ணை உள்ளிட்ட பிறகு, உங்கள் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் உள்ளதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!