அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி அறிமுகம்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி அறிமுகம்!

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேரா ரேஷன் செயலி குறித்து பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

மேரா ரேஷன்

மத்திய அரசின் பொது விநியோகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் சேவைகளை பயனாளிகள் எளிதாக மற்றும் தடையின்றி பெற்றுக்கொள்வதற்காக கடந்த ஆண்டில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) என்ற திட்டம் மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டமானது பணி நிமித்தமாக புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைக்க உதவுகிறது.

சென்னை மாவட்டத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த முன்முயற்சி அரசுக்கு சொந்தமான ரேஷன் சேவைகளை வளைந்து கொடுப்பதோடு, ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்த உதவி செய்கிறது. இந்த சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. வழக்கமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, PDS நன்மைகளை பெறுவதில் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த செயலி மூலம் பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் சேவைகளை பெற முடியும். கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மேரா ரேஷன் செயலியானது தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கான படிகளை இப்போது பார்க்கலாம்.

பதிவிறக்கம் செய்ய:

 • Google Play Storeக்கு செல்லவும்
 • தேடல் பொத்தானைக் கிளிக் செய்து, மேரா ரேஷன் ஆப் என தட்டச்சு செய்யவும்
 • மத்திய Aepds குழு பதிவேற்றிய செயலியை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யவும்.

சேவைகள்:

 • பயனாளர்கள் செயலியை பதிவிறக்கம் செய்ததும், ரேஷன் கார்டு எண்ணை வழங்கி தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
 • பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இருந்து இயக்குவதன் மூலம் அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
 • இந்த செயலியின் மூலம் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் சரிபார்க்கலாம்

 • மேலும் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்
 • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை சரிபார்க்கலாம்.
 • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் இணைப்பு முறையும் இதில் சாத்தியமாகும்.
 • பயனாளிகள் தங்களது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சேவைகளை மதிப்பிடலாம் மற்றும் அதற்கு கருத்து தெரிவிக்கலாம்
 • நியாயமான விலை என அறியப்படும் உரிமம் பெற்ற கடைக்கு Fps பின்னூட்டம் மூலம் கருத்துக்களுடன் பின்னூட்டம் அளிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here