அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியை பயன்படுத்துவது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியை பயன்படுத்துவது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியை பயன்படுத்துவது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியை பயன்படுத்துவது எப்படி?

மத்திய அரசு சார்பில் தொடங்கப்பட்ட ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள மேரா ரேஷன் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது, அதன் பயன்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரா ரேஷன் ஆப்:

புதிய விதிமுறைகளை கொண்டு வருவதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்க இந்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் பயனர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க உதவுவது மட்டுமல்லாமல், செயல்முறைகளை அங்கீகரித்து ஒழுங்குபடுத்தும் அரசின் பணியை எளிதாக்குகிறது. இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக இருப்பது மேரா ரேஷன் செயலி. இந்த செயலி அரசின் ‘ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தினை எளிதாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சேலை – ஏற்பாடுகள் தீவிரம்!

பணி சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் மக்கள் சொந்த ரேஷன் கார்டைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெற முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படை மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய மொபைல் பயன்பாடு அந்த செயல்முறையை எளிதாக்குகிறது. ‘ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தின் படி இந்த செயலி நாட்டில் உள்ள சுமார் 69 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட பயனாளிகளை கொண்டுள்ளது.

NFS சட்டத்தின் கீழ், PDS எனப்படும் பொது விநியோக முறையின் மூலம் 81 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.3க்கு அதிக மானியத்துடன் கூடிய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. நாட்டின் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் இந்த சேவைகளை மக்கள் பெற முடியும். மேரா ரேஷன் செயலி தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது.தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கிய செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்கிறது. மேலும், 14 மொழிகளில் செயலி புதுப்பிக்கப்படும்.

பயன்படுத்தும் முறை:

 • மேரா ரேஷன் செயலியில் பதிவு செய்வதற்கு முன்னால் நீங்கள் ரேஷன் கார்டைப் பெற்ற மாநிலத்தின் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் ரேஷன் கார்டு செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • அதன்பிறகு, கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 • உங்கள் மொபைலில் செயலியை திறந்து உங்கள் ரேஷன் கார்டைப் பதிவு செய்ய வேண்டும்.
 • உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு “சமர்ப்பி” என்பதை அழுத்தியவுடன் நீங்கள் பதிவு செய்யப்படுவீர்கள்.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

 • இந்த திட்டத்தின் பயனர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தங்கள் உணவு தானிய உரிமையை சரிபார்க்கலாம்.
 • உங்களின் கடந்த ஆறு மாத பரிவர்த்தனைகள் மற்றும் ஆதார் பதிவின் நிலையைச் சரிபார்க்கலாம்.
 • உங்கள் அருகிலுள்ள நியாய விலைக் கடை (FPS) அல்லது அருகிலுள்ள ரேஷன் டீலரை எளிதாக கண்டறிய உதவுகிறது.

  Velaivaippu Seithigal 2021

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here