அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள் இதோ!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ் - மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ் - மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள் இதோ!

இந்தியாவில் வேலை நிமித்தமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மேரா ரேஷன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ரேஷன் செயலி

மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மேரா ரேஷன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேரா ரேஷன் செயலி நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இது அரசாங்கத்தின் ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு (ONORC) அமைப்பின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. இந்த செயலி தற்போது 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி இருக்கிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2022ம் ஆண்டு விடுமுறை பட்டியல்!

இது குறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறுகையில், இந்த அமைப்பு ஆகஸ்ட் 2019 மாதத்தில் முதன் முதலாக நான்கு மாநிலங்களில் மட்டும் தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த பட்டியலில் இல்லாத அசாம், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் அடுத்த சில மாதங்களில் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த முழு விபரங்கள்!

இப்போது இந்த ரேஷன் அமைப்பு கிட்டத்தட்ட 69 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) பயனாளிகளை உள்ளடக்கி இருக்கிறது. இது இந்தியாவில் உள்ள NFSA மக்கள் தொகையில் 86% ஆகும். மேலும் ONORC அமைப்பின் கீழ் மாதந்தோறும் சராசரியாக 1.5 முதல் 1.6 கோடி பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் இந்த செயலி மூலம் பதிவு செய்யப்படுகின்றது கவனிக்கத்தக்கது. இப்போது மேரா ரேஷன் பயன்பாட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான அம்சங்களை காணலாம்.

  • மேரா ரேஷன் மொபைல் ஆப்ஸ் ஆண்ட்ராய்டில் மட்டுமே உள்ளது.
  • அனைத்து இந்திய குடிமக்களும் மானிய விலையில் உணவு தானியங்களை பெற, இந்த பயன்பாட்டில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • மேரா ரேஷன் செயலியானது பயனர்கள் தங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதைச் சரிபார்க்கவும், அருகிலுள்ள ரேஷன் கடைகளைக் கண்டறியவும் அனுமதிக்கிறது.
  • இது பயோமெட்ரிக் அங்கீகாரத்தையும் ஆதரிக்கிறது.
  • மேரா ரேஷன் பயன்பாடு ஆதார் அடிப்படையிலான உள்நுழைவுடன் வருகிறது.
  • அதே நேரத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கிறது.
  • இதனுடன் கூடுதலாக 4 மொழிகள் விரைவில் இணைக்கப்பட இருக்கிறது.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!