அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அரசு மேரா ரேஷன் என்ற பெயரில் தனித்துவமான மொபைல் செயலியை அறிமுகம் செய்து உள்ளது. மேலும் மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்வது மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

மேரா ரேஷன் செயலி:

நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தை இந்திய அரசாங்கம் தற்போது ஒரு செயலி மூலம் எளிமைப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் மேரா ரேஷன் என்று பெயரிடப்பட்ட இந்த செயலியின் கீழ் புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். அரசின் இந்த முன்முயற்சி ரேஷன் சேவைகளை மக்கள் தடையில்லாமல் பெற்றுக்கொள்ளவும், ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தவும் உதவி செய்கிறது.

சென்னை: தாறுமாறாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகை பிரியர்களுக்கு ஷாக்!

இந்தச் சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. வழக்கமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் FDS எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது, இந்த PDS நன்மைகளைப் பெறுவதில் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்ய:
  • முதலில் Google Play Storeக்கு செல்ல வேண்டும்
  • தேடல் பொத்தானைக் கிளிக் செய்து, மேரா ரேஷன் ஆப் என தட்டச்சு செய்யவும்
  • மத்திய Aepds குழு பதிவேற்றிய செயலியை பதிவிறக்கவும்.
  • இப்போது பயன்பாட்டை திறந்து பயன்படுத்தலாம்.
முக்கிய அம்சங்கள்:

பதிவு: சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து ரேஷன் கார்டு எண்ணை வழங்குவதன் மூலம் பயனர் தங்களை செயலியில் பதிவு செய்யலாம்

ரேஷன் கடைகள்: பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இயக்குவதன் மூலம் அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ONORC: ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் பயனர் சரிபார்க்கலாம்

பரிவர்த்தனைகள்: ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்

தகுதிக்கான அளவுகோல்கள்: ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை இது சரிபார்க்கிறது.

ஆதார் இணைப்பு: ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் இணைப்பும் இதில் சாத்தியமாகும்.

பரிந்துரை மற்றும் கருத்து: பயனாளி தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் வழங்கப்படும் சேவைகளை மதிப்பிடலாம் மற்றும் கருத்து தெரிவிக்கலாம்

உள்நுழைவு: பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் நீங்கள் வசிக்கும் தற்போதைய மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் உள்நுழைவு செய்யப்படுகிறது.

Fps கருத்து: நியாயமான விலை என அறியப்படும் உரிமம் பெற்ற கடைக்கு Fps பின்னூட்டம் மூலம் கருத்துக்களுடன் பின்னூட்டம் அளிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here