மெல்போர்ன் திரைப்பட திருவிழா – ‘சூரரைப் போற்று’ வெற்றி, நடிகர் சூர்யாவுக்கு விருது!

0
மெல்போர்ன் திரைப்பட திருவிழா - 'சூரரைப் போற்று' வெற்றி, நடிகர் சூர்யாவுக்கு விருது!
மெல்போர்ன் திரைப்பட திருவிழா - 'சூரரைப் போற்று' வெற்றி, நடிகர் சூர்யாவுக்கு விருது!
மெல்போர்ன் திரைப்பட திருவிழா – ‘சூரரைப் போற்று’ வெற்றி, நடிகர் சூர்யாவுக்கு விருது!

கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதில் சூரரைப் போற்று திரைப்படத்துக்கும், நடிகர் சூர்யாவுக்கும் விருதுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்பட விருது

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு OTT தலத்தில் வெளியானது. ஒரு உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு இயக்குனர் சுதா கொங்கரா உருவாக்கிய இத்திரைப்படம் விருதுகளுக்கானது என மக்களால் பாராட்டப்பட்டது. சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுடன், அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேடையில் சர்ப்ரைஸ் கொடுத்த மைனா நந்தினியின் கணவர் – அவரே வெளியிட்ட புகைப்படம்!

இவர்களுடன் ‘சூரரைப் போற்று’ தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், எடிட்டர் சதீஷ் சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் 2021 ஆண்டுக்கான இந்திய திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இதில் சிறந்த நடிப்புக்கான விருதை நடிகர் சூர்யா மற்றும் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் சூரரைப் போற்று வென்றுள்ளது.

இந்த விருதுக்கு முன்னதாக இத்திரைப்படம் தென்னிந்திய சினிமா சார்பில் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் டிஜிட்டல் சினிமா கேமரா மற்றும் ஆஸ்திரேலிய அகாடமி ஆஃப் சினிமா அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் விருதுகளின் (AACTA) சிறந்த ஆசிய திரைப்பட பிரிவிலும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. கூடுதலாக 78 வது கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவின் கீழ் திரையிடப்பட்ட பத்து இந்தியப் படங்களில் சூரரைப் போற்று முக்கியமான ஒன்றாகும்.

TN Job “FB  Group” Join Now

தவிர இந்த திரைப்படம் 93 வது அகாடமி விருதுகளிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் IMDb யின் திரைப்பட மதிப்பீடுகளில் சூரரைப் போற்று படத்துக்கு 9.1 என்ற மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் தகவல். இதனுடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் என்ற இரு விருதுகள் கிடைத்துள்ளதையடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!