பாக்கியலட்சுமி கிச்சனில் இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா, முல்லை – வைரலாகும் “மகா சங்கமம்” வீடியோ!

0
பாக்கியலட்சுமி கிச்சனில் இருக்கும்
பாக்கியலட்சுமி கிச்சனில் இருக்கும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மீனா, முல்லை - வைரலாகும் "மகா சங்கமம்" வீடியோ!
பாக்கியலட்சுமி கிச்சனில் இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா, முல்லை – வைரலாகும் “மகா சங்கமம்” வீடியோ!

விஜய் டிவியில் டாப் சீரியல்களான “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் சில வாரங்களுக்கு முன் மகா சங்கமம் நடத்தப்பட்டது. அப்போது பாக்கியலட்சுமி கிச்சனில் மீனாவும் முல்லையும் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

மகா சங்கமம் வீடியோ:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் டாப் சீரியல்களான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியல்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அந்த இரு சீரியல்களையும் ஒன்றாக இணைத்து சில வாரங்களுக்கு முன் மகா சங்கமம் நடத்தப்பட்டது. அதில் இரு சீரியல் நட்சத்திரங்களும் தாத்தாவின் 75 வது பிறந்தநாளை கொண்டாட ஒன்றாக சேர்ந்து இருந்தனர். அதில் பல திருப்பங்கள் வெளியே கொண்டுவரப்பட்டது.

நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மூர்த்தி, பார்க்க வரும் கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த திருப்பம்!

அதன் படி பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பற்றிய உண்மை எல்லாம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூர்த்திக்கும் தனத்திற்கும் தெரிய வருகிறது. அதனால் அவர்கள் ராதிகாவிடம் கோபியின் குடும்பத்தை நீங்க தெரிந்து கொள்ள வேண்டும் என சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பாக கதை நகர்ந்து சென்றிருக்க இந்த மகா சங்கமம் ஒரு காரணமாக இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் மகா சங்கமம் ஷூட்டிங் ஸ்பாடில் பாக்கியலட்சுமி கிச்சனில் மீனாவும் முல்லையும் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோ தற்போது இரு சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி கிச்சனில் மீனாவும் முல்லையும் இருப்பது பார்க்கவே நன்றாக இருப்பதாக பலர் கமெண்ட் செய்து இருக்கின்றனர். மகா சங்கமம் முடிவில் இரு சீரியலிலும் இப்படி ஒரு திருப்பம் வந்து நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!