தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்? டிச.31 இல் ஆலோசனை! அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்? டிச.31 இல் ஆலோசனை! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்? டிச.31 இல் ஆலோசனை! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்? டிச.31 இல் ஆலோசனை! அமைச்சர் அறிவிப்பு!

ஒமிக்ரான் பரவலின் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து டிச.31ம் தேதியன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார்.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் தற்போது அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை பதிவு செய்து வரும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசுகள் கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே கொரோனா முதல் மற்றும் 2ம் அலை ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் முழுமையாக மறையாத பட்சத்தில் 3ம் அலையாக கருத்தப்படக்கூடிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் எதிர்பாராத அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50000 – நிதி ஒதுக்கீடு!

இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கையாளுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதே வேளையில் மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், டெல்லி, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட சில கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் தமிழகத்திலும் இரட்டை இலக்கங்களாக பதிவு செய்யப்பட்டு வரும் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து வரும் டிச.31ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? ஓமிக்ரான் பரவல் எதிரொலி! வைரலாகும் மீம்ஸ்கள்!

இது குறித்து தகவல் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக டிச.31ம் தேதியன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்பாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையில் தமிழகத்தில் வரும் டிச.31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here