ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மீரா மிதுன் – ரசிகர்கள் ஷாக்!

0
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மீரா மிதுன் - ரசிகர்கள் ஷாக்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மீரா மிதுன் - ரசிகர்கள் ஷாக்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மீரா மிதுன் – ரசிகர்கள் ஷாக்!

பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி புகழை தேடி வந்த மாடல் மற்றும் நடிகை மீரா மிதுன் சமீபத்தில் சிறைக்கு சென்று திரும்பியுள்ள அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மீரா மிதுன்:

திரைத்துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள் அனைவரும் மக்களிடம் நல்ல விதத்தில் மட்டுமே பிரபலமடைந்தார்கள் என்று கூற முடியாது. நெகட்டிவ் விஷயங்கள் மூலமாக பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில், மாடலாக அறிமுகம் ஆனவர் மீரா மிதுன். இவர் சமீப காலமாக அதிக சர்ச்சைகளில் சிக்கி, அதன் மூலம் பிரபலமடைந்தவர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் சூர்யா இவர்களை வம்பிழுத்து, அதன் மூலம் அவர்களின் ரசிகர்களிடம் நல்ல பதிலையும் பெற்றார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரச்சினையினால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி – மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?

தொடர்ந்து மீரா மிதுனை தேடி வந்த காவல் துறையினர் அவர் கேரளாவில் இருப்பதை அறிந்து அவரை செய்த்தனர். அவர் கைது செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ மிகவும் வைரலாக பரவியது. இது மட்டுமில்லாமல் விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சக போட்டியாளர் உடன் நடனமாடும் போது பெரிய சர்ச்சையை எழுப்பி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தார். அங்கேயும் சர்ச்சையை தான் கிளப்பினார். இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த நாட்களில் இவரை பற்றிய செய்திகள் ஏதும் இல்லாமல் இருந்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் குமரனுக்கு கிடைத்த விருது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தற்போது சிறையில் இருந்து வெளிவந்து மீரா மிதுன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில்,வழக்கத்தை விட மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் பேசியுள்ளார். மீரா அதில், தனது குடும்பத்தை பற்றியும், பெற்றோர்கள் பற்றியும் கூறியுள்ளார். இவர் மாடலிங் துறைக்கு வந்தது பிடிக்காமல் இவரது அம்மா இவரோடு பேசுவதையே நிறுத்தி விட்டதாகவும்,குடும்பத்துடன் சேர்ந்து இல்லாமல் தான் தனியாக இருப்பதாகவும் மீரா கூறியுள்ளார். மிகவும் அமைதியாக பேசும் மீராவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here