சூப்பர் மாடல் மீரா மிதுன் கேரளாவில் கைது – குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!

0
சூப்பர் மாடல் மீரா மிதுன் கேரளாவில் கைது - குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
சூப்பர் மாடல் மீரா மிதுன் கேரளாவில் கைது - குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
சூப்பர் மாடல் மீரா மிதுன் கேரளாவில் கைது – குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் பிரபலமானவர் சூப்பர் மாடல் மீரா மிதுன். அவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த நிலையில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரா மிதுன் கைது:

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக எவ்வளவு புகழ் கிடைக்கிறதோ அந்த அளவு ரசிகர்கள் எதிர்ப்பும் கிடைக்கும். அந்த வகையில் நடிகை மீரா மீதுன் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். தொடர்ந்து வெளியே வந்த பின்னரும் பல முன்னணி நடிகர்கள் பற்றி விமர்சனங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார். நடிகர் கமல் குறித்து கூட சர்ச்சைகளை கிளப்பி உள்ளார்.

WhatsApp ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ப்ரொபைல் மூலம் ஸ்டேட்டஸ் பார்க்கும் வசதி!

தன்னை தானே சூப்பர் மாடல் என அழைத்துக் கொள்ளும் அவர் ஒரு வீடியோவில் இயக்குனர் ஒருவர் தனது முகத்தை பயன்படுத்துவதாக அவரை பட்டியலின மக்கள் சாதி பெயர் சொல்லி திட்டியுள்ளார். அதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரை அடுத்து நடிகை மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர். ஆனால் தன்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும் எனவும் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்று நடிகை மீரா மிதுன் பேசிய வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து போலீசார் கண்ணில் மண்ணை தூவி வந்த மீரா மிதுனை தற்போது கேரளாவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!