தமிழகத்தில் ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை!! தமிழகத்தில் தற்போதைய சூழலில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது குறித்த முடிவு இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக முதலில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்தது. இந்த தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்தாத காரணத்தால் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்தது. இதனால் மே 24ம் தேதி முதல் அதிக கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்தது. தளர்வுகளற்ற ஊரடங்கின் விளைவால் இரண்டு வாரத்திற்குள் பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன் பின்னர் ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்தது. ஆனாலும், பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாக உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் அதிகளவு தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 14க்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் தலைமையில், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மருத்துவ வல்லுநர்கள் தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்குமாறு முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்த பரிந்துரையின் அடிப்படையிலேயே முதல்வர் ஊரடங்கு குறித்த முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத 11 மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இல்லை. ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் இன்று அல்லது நாளை வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13
தமிழகத்தில் ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு - மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை!!
தமிழகத்தில் ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு - மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை!!
தமிழகத்தில் ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை!!

தமிழகத்தில் தற்போதைய சூழலில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது குறித்த முடிவு இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக முதலில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்தது. இந்த தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்தாத காரணத்தால் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்தது. இதனால் மே 24ம் தேதி முதல் அதிக கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்தது.

5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!

தளர்வுகளற்ற ஊரடங்கின் விளைவால் இரண்டு வாரத்திற்குள் பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன் பின்னர் ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்தது. ஆனாலும், பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாக உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் அதிகளவு தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 14க்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் தலைமையில், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

TN Job “FB  Group” Join Now

மருத்துவ வல்லுநர்கள் தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்குமாறு முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்த பரிந்துரையின் அடிப்படையிலேயே முதல்வர் ஊரடங்கு குறித்த முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத 11 மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இல்லை. ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் இன்று அல்லது நாளை வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

13 COMMENTS

    • Already from past one year we are in lockdown only.,
      But please do think that it is livelihood issue for everyone, affluent to indigent all of us are in troublesome of this continuous lockdown???!??
      We have already seen very hazardous diseases like cholera, TB, chickungunia, Even cancers too.
      Can we say all are got their monthly salary?? All of them having their daily food???? How many people are living with humiliation due to non payable rents, loans etc. Office goers, small shop owners, hairstylists, beggars, old people., why?? Even though the birds, animals are all affected this lockdown. So lockdown is not a good solution at any cost. It will impaired the livelihood in dangerous way.

  1. “பாதிப்பு குறைவாக உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமலில் உள்ளன.”

  2. Enna pa ithu iptiya ooradangu poita iruntha engala mathiri kasta padura kudumbangal…enna seivathu…😭😭😭😭ippava sagum nilamaiku vanthutom…

    • Don’t worry. Ipo ooradangu release panna, thirumbavum corona paravum. Nooi vandhu savaratha vida, irukrathu vechu sandhosam ha vaazhalaam.. Elaarum tha kashtapadraga

    • Lockdown needs to be relaxed. All shops should be allowed to function from 6am to 9pm so that people can attend to their purchase without rushing.xerox shops and mobile shops to be allowed. E registration is very cumbersome .to be cancelled

  3. மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடிவு எப்பொழுது வரும் என தெரியாமல் தவித்து கொண்டு இருக்கின்ற மக்களின் வாழ்வாதாரம் சீர்க்குலைந்த நிலையில் அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் அனைவரையும் பாதிக்காமல், அதே சமயம் தொற்று பரவாமல் இருக்கின்ற வழி முறைகளையும் பின் பற்றுமாறு இருத்தல் வேண்டும். நிச்சயமாக அரசாங்கத்திற்கு இது சவால் மாத்திரம் அல்ல, இக்கட்டான நிலையும் கூட. மக்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக இல்லாவிடில் இந்நிலை நீடித்தே இருக்கும்.

  4. ஊரடங்கால் என்ன செய்வது என்று தெரியவில்லை, வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இனியும் லேக்டவுனா ?

  5. If at all lock down continues further, the Authorities concerned may permit the autos and taxies to ply within the city limit. The people feel totally uncomfortable due to the e-registration procedure even to go anywhere and return back within the city/district. As countless number of people suffer a lot without any transport facility, .relaxation may be extended at least to go by auto, and taxies anywhere within the city limits upto 25 kms distance
    without any e-registration which will be of a great help and relief to the public. The Authorities concerned should come forward to consider this humble request/suggestion favourably for which the public will highly be thankful to the TN Govt. /

  6. நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்பான நிலையில் உள்ளது. கொரானா பேரிடர் முன்பே தொழில் துறையில் மிகவும் சரிவாக இருந்தது.அரசு அதற்கேற்ற படி நடைமுறை படுத்தினால் நல்லது‌. நோய்த்தொற்றிலும் பாதுகாப்பாக இருப்பதும் அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!