ரேஷன் கடைகளில் ஊழலை தடுக்க நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!

0
ரேஷன் கடைகளில் ஊழலை தடுக்க நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் ஊழலை தடுக்க நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் ஊழலை தடுக்க நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் நடைபெறும் ஊழல்களை தடுக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ரேஷன் கடை:

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் குடும்பத்தினருக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளில் மக்களின் தேவைகேற்ப பல புதிய திட்டங்கள் அறிமுகம் செய்து தமிழக அரசு அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பல லட்சம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை கூட்டுறவு சங்கத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Exams Daily Mobile App Download

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செயலாளர், பொதுவாக கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகளின் விற்பனை பொருட்களான மஞ்சள், எள், பருத்தி உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் ரேஷன் கடைகளில் மங்களம் என்ற பிராண்ட் பெயரில் 14 வகையான மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். ரேஷன் கடைகளிலும் வெளி விற்பனை நிலையங்களிலும் ஆன்லைன் மூலமாக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கிடைக்கும் லாபம் விவசாயிகளையே சேர்கிறது.

தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழக்கும் Netflix – விரைவில் குறைந்த கட்டணத்தில் புதிய திட்டங்கள்

அதிகப்படியான விற்பனை வாய்ப்புகள் இருப்பதால் இதன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரித்து உலக அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சந்தையில் பல தனியார் நிறுவனங்கள் பிரபலமாக இருந்தாலும் அரசு நிறுவனம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் கோதுமை விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க டி.ஜி.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 400 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொது மக்களும் தேவையான அளவில் பொருட்களை வாங்கி ஊழலை தடுக்க ஒத்துழைக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!