NEET UG 2022 கவுன்சிலிங் இட ஒதுக்கீடு முடிவுகள் – MCC இன்று வெளியீடு!

0
NEET UG 2022 கவுன்சிலிங் இட ஒதுக்கீடு முடிவுகள் - MCC இன்று வெளியீடு!
NEET UG 2022 கவுன்சிலிங் இட ஒதுக்கீடு முடிவுகள் - MCC இன்று வெளியீடு!
NEET UG 2022 கவுன்சிலிங் இட ஒதுக்கீடு முடிவுகள் – MCC இன்று வெளியீடு!

மத்திய மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் இட ஒதுக்கீடு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அதனை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதற்கான படிநிலைகள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் UG சீட் ஒதுக்கீடு:

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு MCC NEET UG தேர்வுகள் நடத்தப்பட்டது. மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (MCC) ஆனது, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கான ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS), AIIMS , JIPMER கல்லூரிகள் மற்றும் ஐபி யுனிவர்சிட்டியுடன் இணைந்த மத்திய மருத்துவ நிறுவனங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான நீட் யுஜி கவுன்சிலிங்கை நடத்தி வருகிறது.

இந்த கவுன்சிலிங் மொத்தமாக 4 சுற்றுகளாக நடைபெறுவது வழக்கம். தற்போது NEET UG 2022 கவுன்சிலிங்கில் 2-வது சுற்றில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் சீட் ஒதுக்கீடு விவரங்கள் அடங்கிய முடிவுகள் இன்று வெளியிடப்பட இருக்கிறது. சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள், நவம்பர் 12 முதல் நவம்பர் 18ம் தேதிக்குள் தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் சென்று அட்மிஷன் பணிகளை தொடங்க வேண்டும். இல்லையென்றால் அந்த இடங்கள் காலியிடங்களாக கருதப்பட்டு வேறு மாணவர்கள் அதற்காக ஒதுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
NEET UG 2வது சுற்று கவுன்சிலிங் 2022 சீட் ஒதுக்கீடு முடிவுகள் அறிந்து கொள்ளும் வழிமுறைகள்:
  • முதலில் mcc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின்னர், அதில் NEET UG tab-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
  • News and Events பகுதியில், result link-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • NEET UG சுற்று 2 ஸ்டேட்டஸ்-ஐ இப்பொழுது தெரிந்து கொள்ள முடியும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!