MCC NEET SS 2022 சீட் ஒதுக்கீடு – இன்று துவக்கம்!
மருத்துவ ஆலோசனைக் குழுவின் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடத்திற்கான சீட் ஒதுக்கீடு பணிகள் இன்று தொடங்கியுள்ளது. மேலும் இதற்கான முடிவுகள் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.
MCC NEET:
மருத்துவ ஆலோசனைக் குழுவின்( MCC ) மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்களுக்கான நீட் தேர்வு முடிந்து, கவுன்சிலிங் பணிகள் நடந்து வருகிறது. கவுன்சிலிங்கில் இறுதி செய்யப்படும் தேர்வர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான இடங்களை பெறுவார்கள். செப்டம்பர் 15ம் தேதி நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு முடிவுகள் வெளியானது. முதல்கட்ட கவுன்சிலிங் நவம்பர் 22 முதல் 28, 2022, மதியம் 12:00 மணி வரை நடந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், நவ.29ம் இன்றும், நாளையும் முதல் கட்ட கவுன்சிலிங்கில் தேர்வு பெற்றவர்களுக்கான சீட் ஒதுக்கீடு பணிகள் நடக்கும். NEET SS 2022 முதல் கட்ட கவுன்சிலிங்கின் இறுதி முடிவு டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்படும் என்றும், டிசம்பர் 2ம் தேதி ஒதுக்கப்பட்ட கல்லூரிகளின் விவரங்கள் அறிவிக்கப்படும்.
UPSC: NDA & NA I 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Answer Key வெளியீடு!!
Exams Daily Mobile App Download
MCC NEET SS 2022 சீட் ஒதுக்கீடு பதிவிறக்கம்:
- முதலில், https://mcc.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில், முகப்பு பக்கத்தில் NEET SS 2022 என்ற அறிவிப்பு இருக்கும்.
- அதில், Seat Allotment என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
- இப்பொழுது உங்களின் சீட் ஒதுக்கீடு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.