NEET SS 2022 கவுன்சிலிங் 2ம் சுற்று இட ஒதுக்கீடு முடிவுகள் – MCC வெளியீடு!!

0
NEET SS 2022 கவுன்சிலிங் 2ம் சுற்று இட ஒதுக்கீடு முடிவுகள் - MCC வெளியீடு!!
NEET SS 2022 கவுன்சிலிங் 2ம் சுற்று இட ஒதுக்கீடு முடிவுகள் - MCC வெளியீடு!!
NEET SS 2022 கவுன்சிலிங் 2ம் சுற்று இட ஒதுக்கீடு முடிவுகள் – MCC வெளியீடு!!

மருத்துவ ஆலோசனைக் குழுவின் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு கவுன்சிலிங் 2ம் சுற்று தற்காலிக முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை பற்றிய மேலும் அதிக தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

NEET SS 2022:

மருத்துவ ஆலோசனைக் குழுவின்( MCC ) மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்களுக்கான நீட் தேர்வு முடிந்து, கவுன்சிலிங் பணிகள் முதல் சுற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது 2ம் சுற்று கவுன்சிலிங் இடஒதுக்கீடு முடிவுகள் தற்காலிகமாக வெளியாகியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

முன்னதாக செப்டம்பர் 15ம் தேதி நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்பின்னர், முதல்கட்ட கவுன்சிலிங் நவம்பர் 22ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை நடந்தது. MCCன் 2ம் சுற்று கவுன்சிலிங்-ன் தற்காலிக முடிவுகளுக்கு எதிராக தேர்வர்களின் ஆட்சேபனைகளை ஜனவரி 4ம் தேதியான இன்று காலை 11 மணி வரை மட்டுமே சமர்பிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் – mcc.nic.in என்ற அதிகாரபூர்வ தளத்தின் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

SSC CHSL 4500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

தற்காலிக முடிவுகள் மாற்றத்திற்கு உட்பட்டது என்றும், இதன் பின்னர் அறிவிக்கப்படும் இறுதி முடிவுகளின் பின்னரே, இட ஒதுக்கீடு தொடர்பான உரிமையை விண்ணப்பதாரர்கள் கோர முடியும் என்றும், இறுதி முடிவுக்கு பின்னர் தான் சம்பந்தப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியை மாணவர்கள் அணுக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!