மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!

மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, நீடூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை ஜூலை 7ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர பணிகள்

தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதாவது அதிகமான காற்று வீசினால் வயர்கள் அறுந்து விழுதல், அதிகமாக மழை பெய்தால் மின் கம்பங்கள் சாய்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும், மின் நிலையங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்கிறதா? வயர்கள் மரக்கிளைகளில் உரசி கொண்டிருக்கிறதா மற்றும் புதிய கருவி நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மின் தடை செய்யப்பட்டு மின் ஊழியர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

TNPSC Group IV மற்றும் Group VIII தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான பதிவு இது!

அந்த வகையில், சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட எடமணல், அரசூர், ஆச்சாள்புரம், பொறையாறு, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு மற்றும் கிடாரன் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சீர்காழி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கி. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதனைத்தொடர்ந்து, நீடூர் துணை மின் மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நீடூர், வில்லியநல்லூர், பாலாக்குடி, கொற்கை, கங்கணம்புத்தூர்,நடராஜபுரம், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லூர், மல்லியக்கொல்லை, கொண்டல், தாழஞ்சேரி, அருண்மொழித்தேவன், மேலாநல்லூர், கீழமருதாந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மயிலாடுதுறை கோட்ட மின் செயற்பொறியாளர் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here