வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான விடுமுறை பட்டியல்!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான விடுமுறை பட்டியல்!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான விடுமுறை பட்டியல்!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான விடுமுறை பட்டியல்!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஏப்ரல் மாதத்தில் இன்னும் 3 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதத்திற்கான முழு விடுமுறை நாட்காட்டியையும் இப்பதிவில் பார்க்கலாம்.

வங்கி விடுமுறை

இந்தியாவில் வங்கி விடுமுறைகள் பொதுவாக மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இருப்பினும் பொது விடுமுறைகள், அரசு விடுமுறைகள் என நாடு முழுவதும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இப்போது ஏப்ரல் 2022 ஏறக்குறைய முடிந்துவிட்டது. எனவே, வங்கி தொடர்பான முக்கியமான வேலைகள் ஏதேனும் இருந்தால், அதுவும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டியிருந்தால் ஏப்ரல் 2022 இன் இரண்டாம் பாதியில் மூன்று நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்ற வேண்டும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு!

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், இந்தியாவில் உள்ள அனைத்து பொது, வணிக, வெளிநாட்டு, கூட்டுறவு மற்றும் பிராந்திய வங்கிகள் ஏப்ரல் மாதத்தில் மீதமிருக்கும் 10 நாட்களில் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. இதனை தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் மே மாதத்தில் சுமார் 7 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பட்டியலையும் இப்போது விரிவாக பார்க்கலாம்.

  • 21 ஏப்ரல் – கரியா பூஜையையொட்டி திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.
  • 24 ஏப்ரல் – ஞாயிற்றுக்கிழமை
  • 29 ஏப்ரல் – ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடாவை முன்னிட்டு ஜம்மு மற்றும் காஷ்மீரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மே மாதத்திற்கான வங்கி விடுமுறை:
  • 1 மே – மகாராஷ்டிராவில் மே தினம் மற்றும் பிற மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • 2 மே – மகரிஷி பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு, பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.

  • 3 மே – ஈத் அல்-பித்ர் காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • 4 மே – தெலுங்கானா மாநிலத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • 9 மே – குரு ரவீந்திரநாத் ஜெயந்தி நாளில், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.
  • 16 மே – புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • 24 மே – காசி நஸ்ருல் இஸ்லாமின் பிறந்தநாளை முன்னிட்டு திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here