மே மாதம் முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – முழு பட்டியல் இதோ!

0
மே மாதம் முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - முழு பட்டியல் இதோ!
மே மாதம் முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - முழு பட்டியல் இதோ!
மே மாதம் முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – முழு பட்டியல் இதோ!

நாளை (மே.1) முதல் துவங்க இருக்கும் மே மாதத்தின் முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மே மாதத்தில் கூடுதலாக 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட இருக்கிறது.

வங்கி விடுமுறை

நடப்பு ஆண்டின் ஐந்தாவது மாதமான மே பல்வேறு பண்டிகைகளால் நிறைந்திருக்கிறது. அந்த வகையில் மே மாதத்தின் முதல் 3 நாட்களே வங்கி விடுமுறைகளுடன் தொடங்குகிறது. அதனால் வங்கி தொடர்பான சில முக்கியமான பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றால், நாளை (மே 1) முதல் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்பதை மனதில் வைத்து வாடிக்கையாளர்கள் தங்களது வேலைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது ரிசர்வ் வங்கியின் பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் இந்த மாதம் நான்கு விடுமுறைகள் உள்ளன.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கவனத்திற்கு – உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு!

மீதமுள்ள ஏழு வார இறுதி விடுமுறைகள் ஆகும். இந்த வங்கி விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்கள், பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் இந்தியாவில் உள்ள பிராந்திய வங்கிகள் ஆகியவை குறிப்பிட்ட தேதிகளில் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.

அதன் கீழ் இந்த மாதத்தில் மே மாதம் 1ம் தேதியன்று தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு வங்கிகள் அடைக்கப்படும்.

இது தவிர இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு வங்கி விடுமுறைகள் வேறுபடுகின்றன. இப்போது மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

  • மே 1 – ஞாயிறு, இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • மே 2 – ரம்ஜான்-ஈத்தை முன்னிட்டு கொச்சி, திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • மே 3 – பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி/ரம்ஜான்-ஈத்/பசவ ஜெயந்தி/அக்ஷய திரிதியை முன்னிட்டு கேரளாவின் கொச்சி, திருவனந்தபுரம் தவிர இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
  • மே 8 – ஞாயிறு
  • மே 9 – ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளன்று மேற்கு வங்காளத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
  • மே 14 – சனிக்கிழமை
  • மே 15 – ஞாயிறு
  • மே 16 – புத்த பூர்ணிமாவை முன்னிட்டு திரிபுரா, பேலாபூர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, புது தில்லி சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • மே 22 – ஞாயிறு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!