நாடு முழுவதும் மே மாதம் ரூ.1.02 லட்சம் கோடி GST வசூல் – மத்திய நிதி அமைச்சகம் தகவல்!

0
நாடு முழுவதும் மே மாதம் ரூ.1.02 லட்சம் கோடி GST வசூல் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்!
நாடு முழுவதும் மே மாதம் ரூ.1.02 லட்சம் கோடி GST வசூல் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்!
நாடு முழுவதும் மே மாதம் ரூ.1.02 லட்சம் கோடி GST வசூல் – மத்திய நிதி அமைச்சகம் தகவல்!

நாட்டின் மே மாத ஜிஎஸ்டி தொகையாக ரூ. 1,02,709 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வசூல்:

ஒவ்வொரு நாட்டின் சீரான செயல்பாட்டிற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் வரிப்பணம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் வரிப்பணம் செலுத்த வேண்டியது அவர்களின் கடமையாகும். ஒவ்வொரு மாதமும் நாட்டின் வரிப்பணம் வசூலாகியுள்ள விபரங்களை மத்திய அரசு அறிவிக்கும். அந்த வகையில் தொடர்ந்து மே மாதமும் 8வது முறையாக வரிப்பணம் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாக நிதித்துறை அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

மே மாத ஜிஎஸ்டி குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி ரூ.1.02 லட்சம் கோடியை எட்டி உள்ளதாகவும், கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு 65% கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Twitter செயலிக்கு காலவரையற்ற தடை – நைஜீரியா அரசு அறிவிப்பு!

2021 மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,02,709 மத்திய ஜிஎஸ்டி ரூ.17,592 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.22,653 கோடி, பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.26,002 கோடி வரி உட்பட இன்டர் ஜிஎஸ்டியாக ரூ.53,199 கோடி வசூலாகியுள்ளது. செஸ் வரி ரூ.9,265 கோடி ( இறக்குமதி மீது விதிக்கப்பட்ட ரூ.868 கோடி உட்பட) வசூலாகியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!