மே தின ஸ்பெஷல் திரைப்படங்கள் – அஜித், சூர்யா, சிம்பு என டாப் ஹீரோக்களுடன் களமிறங்கும் சேனல்கள்!

0
மே தின ஸ்பெஷல் திரைப்படங்கள் - அஜித், சூர்யா, சிம்பு என டாப் ஹீரோக்களுடன் களமிறங்கும் சேனல்கள்!
மே தின ஸ்பெஷல் திரைப்படங்கள் - அஜித், சூர்யா, சிம்பு என டாப் ஹீரோக்களுடன் களமிறங்கும் சேனல்கள்!
மே தின ஸ்பெஷல் திரைப்படங்கள் – அஜித், சூர்யா, சிம்பு என டாப் ஹீரோக்களுடன் களமிறங்கும் சேனல்கள்!

நாள்தோறும் உழைக்கும் தொழிலார்களுக்கு உரிமைக்காகவும், தியாகத்திற்காகவும் உருவானதே மே தினம். ஆனால் தற்போது மே தினம் விடுமுறை நாள் என்பதால் பலர் நிம்மதியாக வீட்டில் இருந்து புதுப்படங்களை பார்க்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதை சாதகமாக பயன்படுத்தி பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு புதுப்படங்களை ஒளிபரப்ப தயாராக இருக்கிறது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மே தினம் சிறப்பு திரைப்படம்:

உலகத்தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் பல ஆண்டுகளுக்கு முன் போராளிகள் போராடி வாங்கி கொடுத்தது. தொழில் வளர்ச்சியின் காரணமாக 18 ஆம் நூற்றாண்டில் பல நாடுகளும் மிக வேகமாக வளர ஆரம்பித்தன. அந்த நேரத்தில் பலர் தொழிலாளர்களை அடிமைகளாக வைத்திருந்தனர். 18 ஆம் நூற்றாண்டு வரை உலகின் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் தினமும் 12 முதல் 18 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்யவேண்டிய கட்டாயம் இருந்தது.

ExamsDaily Mobile App Download

அதில் இருந்து போராடி தொழிலார்களுக்கான உரிமைகளை பெற்ற தினம் தான் மே தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் வீட்டில் குடும்பத்துடன் நிம்மதியாக இருந்து புது படங்களை பார்க்க பலர் ஆசைப்படுகின்றனர். ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி சேனல்கள் அன்றைய தினம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களை ஒளிபரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1 முதல் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அதன் படி, அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படம், மே தினம் ஸ்பெஷலாக ஜீ தமிழ் சேனலில் மாலை 6. 30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மே தினத்தன்று சன் டிவியில் மாலை 6. 30 மணிக்கு வர இருக்கிறது. சிம்புவின் மாநாடு திரைப்படம் மே 1 அன்று விஜய் டிவியில் மதியம் 1. 30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த படம் என்று விமர்சனம் ரீதியாக பெயர் பெற்ற ரைட்டர் திரைப்படம் கலர்ஸ் தமிழ் சேனலில் மே தினத்தன்று மாலை 4. 30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here