நடப்பு நிகழ்வுகள் மே 26 மற்றும் 27

0

நடப்பு நிகழ்வுகள் மே 26 மற்றும் 27

தேசிய செய்திகள்

அரியானா

அடேலி -புலேரா டெடிகேட்டட் பிரெயிட் காரிடோர் 

  • அடேலி -புலேரா டெடிகேட்டட் பிரெயிட் காரிடோரின் மேற்கு பிரிவு 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து  திறக்கப்படும். இது ஹரியானா (மகேந்திரா மாவட்டம்) மற்றும் ராஜஸ்தான் (ஜெய்ப்பூர் மாவட்டம்)இல் அமைந்துள்ளது.

புது தில்லி கிழக்கு புறப்பகுதி விரைவுச் சாலையை பிரதமர் தொடங்கி வைத்தார்

  • தில்லி என். சி. ஆர் பிராந்தியத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு விரைவு வழிச் சாலைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவற்றில் தில்லி – மீரட் விரைவுச் சாலையின் முதலாவது பகுதியாக நிஜாமுதீன் பாலத்திலிருந்து  தில்லி உ.பி. எல்லை வரையிலான 14 வழித் தடங்களை கொண்ட நுழைவுக் கட்டுப்பாடுடைய சாலை முதலாவதாகும்.
  • என்.எச்.1-ல் உள்ள குண்ட்லியிலிருந்து என்.எச்-2ல் உள்ள பல்வால் வரையிலான 135 கி.மீ. தூரமுள்ள கிழக்கு புறப் பகுதி விரைவுச் சாலை இரண்டாவது திட்டமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

தமிழ்நாடு

சென்னை சிறப்பு பாரம்பரிய ரயில்

  • சென்னை எழும்பூர், கோடம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு இடையே மே மாதம் 27 ஆம் தேதி தொடங்கும் மூன்று அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் பாரம்பரிய சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சர்வதேச செய்திகள்

அயர்லாந்தில் கருக்கலைப்பு தடை நீக்கம்

  • அயர்லாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்ததால் அந்தச் சட்டம் அகற்றப்பட்டு, கருக்கலைப்பு தொடர்பாக புதிய அம்சங்களைக் கொண்ட சட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்திற்கு, கருக்கலைப்பு தடையினால் உயிரிழந்த இந்தியப் பெண் சவீதாவின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

அயர்லாந்து

பிரதமர்      – லியோ வரத்கர்

தலைநகரம் – டப்ளின்

நேட்டோவின் முதல் லத்தீன் அமெரிக்க உலகளாவிய பங்குதாரர்

  • கொலம்பியா நேட்டோவின் முதல் லத்தீன் அமெரிக்கரான “உலகளாவிய பங்காளியாக” மாறவிருக்கிறது.
  • ஜனாதிபதி – ஜுவான் மானுவல் சாண்டோஸ்
  • நேட்டோ நாடுகள்: ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஈராக், ஜப்பான், கொரியா, மங்கோலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான்

சந்திரனில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்

  • சந்திரனில் நடந்த அமெரிக்காவின் நாசா மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஆலன் பீன் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • அப்பல்லோ விண்கலம் மூலம் முதன் முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரன் சென்று திரும்பினார். அதன் பின்னர் 4 மாதங்கள் கழித்து அப்பல்லோ விண்கலம் மூலம் 4 பேர் கொண்ட குழுவுடன் ஆலன் பீன் சந்திரன் சென்றார். இதன் மூலம் இவர் சந்திரனில் நடந்த 4-வது விண்வெளி வீரர் ஆனார்

அல்பர்டோ புயல்: புளோரிடா, அலபாமா, மிசிசிப்பியில்  அவசரகால நிலை

  • புளோரிடா, அலபாமா மற்றும் மிசிசிபி ஆகியவை அல்பர்ட்டோ புயலால் அவசரநிலை மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன.

அறிவியல் செய்திகள்

காகித அடிப்படையிலான பயோசென்சார் டிடெக்ட் எத்தனால்

  • ஐ.ஐ.டி கவுஹாத்தியின் ஆராய்ச்சியாளர்கள் காகித அடிப்படையிலான பயோசென்சார் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.இது எத்தனாலை கண்டறிய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக & பொருளாதாரம்

ஹெச்-4 விசா பணி ஆணை ரத்து ஜூன் மாதம் இறுதி முடிவு

  • ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் , அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU),ஒப்பந்தங்கள்& மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சீனா, புர்கினா பாசோ ஒப்பந்தம்

  • சீனா மற்றும் புர்கினா பாசோ தூதரக உறவுகளை நிறுவுவதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

மாநாடுகள்

இந்தியா, பாகிஸ்தான் கடற்படை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன

  • இந்தியாவும் பாகிஸ்தானும் மே இறுதி வாரம் கடற்படை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு செய்திகள்

இந்தியா, ரஷ்யா S-400 ட்ரையூம் ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தைகள் முடிவடைகிறது

  • இந்திய விமானப்படைக்கு S-400 ட்ரையூம் ஏர் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு கிட்டத்தட்ட ரூ .40,000 கோடி ஒப்பந்தம் செய்ய ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை இந்தியா முடிவு செய்துள்ளது.

திட்டங்கள்

அட்டப்பாடி , கேரளாவில் கிச்சன் திட்டம்

  • ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அட்டப்பாடி , கேரளாவில் அன்னப்ராதாயினி கம்யூனிட்டி கிச்சன் திட்டத்திற்கு  6 கோடி ரூபாய்  வழங்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

  • இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஏ.கோப்பண்ணா

நியமனங்கள்

பார்படாஸ் பிரதமர்

  • பார்படாஸின் முதல் பெண் பிரதாமராக மியா மோட்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி- சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்

  • ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

யுபர் கோப்பை (பேட்மின்டன்)

  • ஜப்பான் தாய்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெண்கள் யுபர் கோப்பை (பேட்மின்டன்) யை வென்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!