முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 24

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 24

  • மே 24 – உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்.ஸ்கிசோஃப்ரினியா – ஒரு நபரின் நினைவுதிறன்,உணரும்திறன் மற்றும் தெளிவகயோசிக்கும் திறனையும் பாதிக்கக்கூடிய கோளாறாகும்.
  • பிரதமர் மோடி சாந்தி நிகெட்டானில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான கலாச்சார உறவுகளின் அடையாளமாக பங்களாதேஷ் பவன் திறந்துவைத்தார்.
  • உத்தரகண்ட் டெஹ்ரி மாவட்டத்தில் 25 முதல் 27 ம் தேதி வரை இந்தியாவின் கலாச்சார அமைச்சு ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத் திட்டத்தின் கீழ் ராஷ்டிரிய சன்ஸ்க்ரிதி மஹோட்சவின் 9 வது விழாவை ஏற்பாடு செய்தது.
  • யூ.என்.இ.பீ. குழுக்கள் மற்றும் டாட்டா பவர் நிறுவனத்தைச் சேர்ந்தவல்லுநர்கள் சமீபத்தில் மாநிலத்தின் 8,000 அரசுப் பேருந்துகளை பேட்டரி உந்து வண்டிகளாக மாற்றும் திட்டத்தை மறுஆய்வு செய்தனர்.
  • இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த யோகேஷ் சுக்கிவத் என்ற வாலிபர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கழைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். பூச்சிகளை போன்ற பறக்கும் ரோபோட்டை உருவாக்கி இந்தியாவைச் யோகேஷ் சுக்கிவத் அறிவியல் துறையில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
  • இந்தியாவின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் வெற்றியை ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் கவனித்து வருவதாகவும், இதனை தங்களது நாடுகளில் செயல்படுத்துவது குறித்து அவை திட்டமிட்டு வருவதாகவும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) நிறுவனத்தின் மறைமுக வரிப் பிரிவுத் தலைவர் ஜோ பெல்லோ தெரிவித்துள்ளார்.
  • சிஎஸ்சி SPV (சிறப்பு நோக்கத்திற்காக) மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தி வங்கி (SIDBI) SIDBI இன் நேரடி நிதியளிக்கும் விண்டோவின் கீழ், குறைந்தபட்சம் ஒரு வருட காலத்திற்குள் நாடு முழுவதும் பொது சேவை மையங்கள் (CSC க்கள்) நிதி உதவி வழங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • சரஸ்வதி நதியின் மறுமதிப்பிற்கு ஹரியானா 2 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.புரிந்துணர்வு ஒப்பந்தமானது சரஸ்வதி நதியின் மறுசீரமைப்பு மற்றும் நீர்வளங்கல் பற்றிய ஆராய்ச்சிக்காக கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • மே 21-22, 2018 இல் புனோம் பென் நகரில் கம்போடியா பேரரசின் பிரதம மந்திரியால் 5 வது இந்தியா சி.எல்.எம்.வி. (கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாம்) கூட்டத்தை தலைமை தாங்கினார்.
  • இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான கூட்டு பயிற்சி சூரியா கிரான்-XIII பிப்ரவரி 30, 2018 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை உத்தரகாண்ட் பித்தோர்கரில் நடக்கும்.
  • புது தில்லியில் பள்ளிக் கல்வியின் முழுமையான வளர்ச்சிக்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சு சமக்ரா ஷிக்சா திட்டத்தை துவக்கியுள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழில் ஆராச்சிக் கவுன்சிலுக்கு அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் பகுப்பில் க்ளாரிவேட் அனலிட்டிக்ஸ் இந்தியா இன்னோவேஷன்  விருது 2018 வழங்கப்பட்டது.
  • .என்.எஸ்.வி. தாரிணி குழுவின் உறுப்பினர்களுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி பெருமைமிகு நாரிசக்தி விருதினை புதுதில்லியில் வழங்கினார்.
  • ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி MD & CEO – அனுபிரதா பிஸ்வாஸ் ·         உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த் தங்கப்பதக்கத்தை வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!