முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 22

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 22

 • மே 22: சர்வதேச பல்லுயிர் தினம். தீம் :செலிப்ரேட்டிங் 25 இயர்ஸ் ஆப் ஆக்க்ஷன் ஆன் பயோடைவர்சிட்டி.
 • தவரப்பட்ட இணைப்பு திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு 15 வருடங்களை அதிகப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (MSRDC) தெரிவித்துள்ளது.
 • 144 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் புஷ்கரம் நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
 • 2021ஆம் ஆண்டிற்குள் மைசூரு வாட்டர் பாசிட்டிவ் “,என்பது மைசூரு மற்றும் சுற்றியுள்ள ஏரிகளை  பாதுகாப்பதற்காக  இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ), மைசூரு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு முயற்சியாகும்.
 • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) மூலம் கச்சா எண்ணெய் தோண்டும் பணிகள் கிருஷ்ணா மாவட்டத்தில் நாகயலங்கா தொகுதியில் தொடங்கவுள்ளது.
 • மே 23 முதல் 25 வரை பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானால் நடத்தப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) – பிராந்திய பயங்கரவாத அமைப்பின் (SCO-RATS) உறுப்பினர்களுடன் சந்திப்பதற்கான மூத்த பிரதிநிதிகளை இந்தியா அனுப்பியுள்ளது .
 • தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு நிலை என்னும் அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம்(WII) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
 • உலகின் மிகப்பெரிய சீன சலாமாண்டர்கள்,உணவிற்காக சட்டவிரோமாக வேட்டையாடப்படுவதால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது.
 • நிலவின் இருளான மறு பக்கத்தை ஆராய சீன விண்வெளி ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது பூமியில் இருந்து செயற்கைகோள் ஒன்றை அனுப்பியுள்ளது.
 • போபாலில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3 வது வருடாந்தர கூட்டத்திற்கு முன்னதாக “சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி” பற்றிய ஒரு நாள் பிராந்திய மாநாடு நடக்கவுள்ளது.
 • ஹிமாசல பிரதேசத்தில் சுற்றுலா வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக நய் ரஹேன் நய் மன்சிலேன் திட்டத்தை மாநில அரசு துவக்கியுள்ளது.
 • உற்பத்தி பொருட்களின் விலை ஏற்ற,இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கத்தில் விவசாய ஒப்பந்த சட்ட மாதிரியை மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் வெளியிட்டார்.
 • இன்ட்ராப்ரெனியூர்ஷிப் அண்ட் மேனேஜ்மென்ட் ஆப் பார்மர் ப்ரொடியூசிங் கம்பெனிஸ்” – க்ராண்ட் த்ரோண்டோன்
 • அர்செனல் புதிய மேலாளர் – யூனை எமரி
 • இந்திய மேலாண்மை நிறுவனம், கோழிக்கோடு, (ஐஐஎம்கே) – டெபாஷிஸ் சாட்டர்ஜி
 • ஹாரி கேன் இங்கிலாந்தின் கால்பந்து உலகக் கோப்பையின் கேப்டனாக ரஷ்யாவில் நியமிக்கப்பட்டார்.
 • மியூனிச்சில் நடக்கும் ஐ.எஸ்.எஸ்.எஃப் ஷூட்டிங் உலகக் கோப்பையில் இந்தியா போட்டியிடவுள்ளது.மனு பாக்கர்,ஹீனா சித்து,ஜீத்து ராய் ஆகியோர் ஐஎஸ்எஸ்எப் ஷூட்டிங் உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ளனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here